Published:Updated:

அரசின் கோரிக்கை ஏற்பு! - சார்பதிவாளர் மீது நடவடிக்கை கோரிய வழக்கு முடித்துவைப்பு

புதிதாக  வீடு  கட்டிய இடத்தில்  காலி மனை என தொடர்ந்து  பத்திரப் பதிவு செய்து அரசுக்கு வருவாய்  இழப்பீடு ஏற்படுத்திய பாவூர்சத்திரம் சார்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முடித்துவைத்தது.

நெல்லையை சேர்ந்த பாலகிருஷ்ணபிரபு உயர்நீதி மன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில்,"நெல்லை மாவட்டம் தென்காசி தாலுகா பாவூர்சத்திரத்தில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் அரசுக்கு  இழப்பு ஏற்படும் வகையில் அதிகாரிகள் நடக்கின்றனர். ஒரு வீட்டை விற்பவரும், வாங்குவரும் பயன்பெறும் வகையில் செயல்பட்டு அரசுக்கு  இழப்பை ஏற்படுத்துகின்றனர். புதிதாக கட்டிய வீட்டை பத்திரப்பதிவு செய்யும் போது, வீடு இருப்பதை மறைத்து காலி இடம் என பத்திரப்பதிவு செய்யபடுகிறது. இதனால் வீட்டை வாங்குவோருக்கு லட்சகணக்கில் பத்திர செலவு மிச்சமாகிறது. வீட்டை விற்பவருக்கு அப்பூருவல் செலவு மிச்சமாகிறது. வீட்டை வாங்கியவர்  காலி இடம் என பத்திரப்பதிவு செய்த பின் அப்ரூவல் வாங்குகிறார். இதனால் அரசுக்கு  வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு வீடு இருப்பதை மறைத்து காலி இடம் என பத்திரப்பதிவு செய்வதற்கு பாவூர்சத்திரம் சார்பதிவாளர் உறுதுணையாக இருந்து ஒவ்வொரு பத்திர பதிவிற்கும் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை  அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி கலைசெல்வி என்ற ஆசிரியர், புதிதாக வாங்கிய வீட்டை சார்பதிவாளர் உதவியுடன் காலி இடம் என பத்திரப்பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக மார்ச் மாதம், மாவட்ட பதிவாளருக்கு வீட்டின் புகைபடத்துடன் புகார் அனுப்பினேன். ஆனால் நடவடிக்கை இல்லை. சார்பதிவாளர் அலுவலகத்தில் புதிதாக வீடு கட்டிய இடத்தினை, காலி மனை என பத்திரப் பதிவு செய்து அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்திய பாவூர்சத்திரம் சார்பதிவாளர் மற்றும் கலைசெல்வி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் புகார் தொடர்பாக,  அரசு உரிய  நடவடிக்கை எடுத்து வருகிறது என அரசுதரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து வழக்கினை முடித்துவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.