Published:Updated:

இத்தாலி வீரர்கள் வழக்கு: கேரளாவில் தனி நீதிமன்றம் அமைக்க உம்மன் சாண்டி கோரிக்கை

திருவனந்தபுரம்: மீனவர்களை சுட்டுக்கொன்ற வழக்கை விசாரிக்க கேரளாவில் தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்றவர்களுக்கு மரண தண்டனை அளிக்க மாட்டோம் என்று இத்தாலி அரசாங்கத்திடம் மத்திய அரசு எழுத்துப்பூர்வ உறுதி அளித்ததை தொடர்ந்து, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இத்தாலி வீரர்கள் 2 பேரும் இந்தியா அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

##~~##
மேலும் இந்தியாவில் அவர்கள் சுதந்திரமாக தங்கி இருந்து விசாரணையை எதிர்கொள்ளவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ‘‘கொல்லத்தில் வழக்கு தொடர்பான சாட்சிகளும் ஆவணங்களும் இருப்பதால் கேரளாவிலேயே தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும். அப்போதுதான் இவ்வழக்கை விசாரிக்க வசதியாக இருக்கும்’’ என்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார் கேரள முதல்வர் உம்மன் சாண்டி.