Published:Updated:

இத்தாலி தூதருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

இத்தாலி தூதருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!
இத்தாலி தூதருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!
இத்தாலி தூதருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

புதுடெல்லி: இத்தாலி தூதர் டேனியல் மன்சினி, இந்தியாவை விட்டு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது.

கேரள மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில், இத்தாலி கடற்படை ஊழியர்கள் மஸிமிலானோ லட்டோர் மற்றும் சல்வட்டோர் கிரோன் ஆகியோர் கடந்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இத்தாலியில் நடந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு சென்ற இத்தாலி கடற்படை வீரர்களை, இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, இத்தாலி தூதர் உச்சநீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதிகள் மீறப்பட்டதால், அவர் இந்தியாவை விட்டு வெளியேறக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் நெருக்கடி காரணமாக, இத்தலி கடற்படை வீரர்கள் வழக்கு விசாரணைக்காக இந்தியா திரும்பினர்.

##~~##
இந்நிலையில் இவ்வழக்கு விசாரணை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இத்தாலி தூதர் இந்தியாவை விட்டு வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது.
அத்துடன் தனி நீதிமன்றத்தில் வரம்புகள் குறித்து தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை வருகிற மே 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.