Published:Updated:

“நியாயம் நம்ம பக்கம் இருந்தா ஜெயிக்க முடியும்!”

“நியாயம் நம்ம பக்கம் இருந்தா ஜெயிக்க முடியும்!”
பிரீமியம் ஸ்டோரி
“நியாயம் நம்ம பக்கம் இருந்தா ஜெயிக்க முடியும்!”

மக்களுக்காக... யாழ் ஸ்ரீதேவி படங்கள்: க.தனசேகரன்

“நியாயம் நம்ம பக்கம் இருந்தா ஜெயிக்க முடியும்!”

மக்களுக்காக... யாழ் ஸ்ரீதேவி படங்கள்: க.தனசேகரன்

Published:Updated:
“நியாயம் நம்ம பக்கம் இருந்தா ஜெயிக்க முடியும்!”
பிரீமியம் ஸ்டோரி
“நியாயம் நம்ம பக்கம் இருந்தா ஜெயிக்க முடியும்!”

சேலத்தில் இருந்து அரை மணி நேரப் பயணம். வீராணத்தைத் தொட்டு வீமனூர் வழியாக பள்ளிக்கூடத்தானூரை எட்டிவிடலாம். தந்தை மாதையன் பெயரைவிட வளர்மதியின் பெயரே ஊரில் பிரபலம்.

‘‘வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தப்போ, `மாவோயிஸ்டுகளுக்கும் எம்பொண்ணுக்கும் தொடர்பு இருக்கு. எங்க வீட்ல யார்கூடயும் பேசாதீங்க'ன்னு, க்யூ பிராஞ்ச் ஆளுங்க பக்கத்து வீடுகள்ல சொல்லிட்டு இருந்தாங்க. தினமும் எங்க வீட்டைச் சுத்திச் சுத்தி பார்த்துட்டிருந்தாங்க. ஆனா, எம்பொண்ணைப் பத்தி எல்லாருக்கும் தெரியும். அநியாயத்தைக் தட்டிக்கேட்கறவங்களைப் பார்த்து அரசாங்கம் இப்படியா பயந்துக்கும்?!’’ என்கிற கேள்வியுடன் வரவேற்கிறார் வளர்மதியின் தந்தை மாதையன்.

“நியாயம் நம்ம பக்கம் இருந்தா ஜெயிக்க முடியும்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விசைத்தறியின் சத்தத்துக்கு இடையில் அடுத்தடுத்து ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்துக்கொண்டும், நலம் விசாரிக்க வரும் தோழர்களோடு பேசியபடியும் இருந்தார் வளர்மதி. அந்த எளிய பெண்ணிடம் இருந்து வெளிப்படுகிற ஒவ்வொரு வார்த்தையிலும் அதிகார வர்க்கத்தின் மீதான கோபம் தெறிக்கிறது.

``எனக்கு விவரம் தெரிஞ்ச வயசுல இருந்து, அப்பாவும் அம்மாவும் டிபன் கடையில நேரம் காலம் பார்க்காம வேலை பார்த்துட்டு இருப்பாங்க. எல்லாருக்கும் சோறு போடுற அவங்களுக்கு சாப்பிடக்கூட நேரமிருக்காது. நான் வீமனூர் அரசுப் பள்ளியில பத்தாம் வகுப்பு வரை படிச்சேன். சேலம் செயின்ட் ஜோசப் மகளிர் பள்ளியில ப்ளஸ் டூ.

பள்ளி நாள்கள்ல பேச்சுப் போட்டியில என் பேர் இருக்கும். பாட்டு, நடனம்னு கலைப்போட்டிகள்லயும் கலந்துப்பேன். பத்துல ஒன்பது போட்டிகள்ல பரிசு வாங்கிருவேன். போட்டிக்குக் கொடுக்குற தலைப்புகளுக்காகத் தேடி எழுதும்போதுதான் சாதிப்பிரச்னை, ஈழத்தமிழர் பிரச்னை பத்தின விஷயங்களை ஆழமா வாசிக்க ஆரம்பிச்சேன். இசைப்பிரியாவோட வீடியோ உள்பட இலங்கையில நடந்த கொடுமைகள் எனக்குள்ள பெரிய மாற்றத்தை ஏற்படுத்திச்சு. அப்புறமாதான் அமைப்புகள் நடத்தின போராட்டங்கள்ல களம் இறங்க ஆரம்பிச்சேன். அப்பா கண்டிச்ச நேரங்கள்ல அம்மா எனக்கு ஆதரவா இருந்தாங்க’’ என்று தான் சாதாரணப் பெண்ணாக இருந்து போராட்டக்காரியாக மாறியதைப் பகிர்ந்தார் வளர்மதி.

‘‘ஐந்தாம் வகுப்பு படிச்சப்போ எல்லா குழந்தைகளையும் போல ஐ.ஏ.எஸ் ஆகணும்னுதான் நானும் கனவு கண்டேன். `ஐ.ஏ.எஸ்’ஸா இருந்தாலும் அரசுக்கு அடிமை வேலைதான் பார்க்கணும்னு புரிந்த வயதில் அந்தக் கனவை நானே உடைச்சுட்டேன். எந்தக் காலத்துலயும் அரசு வேலைக்குப் போகக் கூடாதுன்னு முடிவெடுத்து விவசாயம் பற்றி தெரிஞ்சுக்கத்தான் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துல வேளாண் படிப்புல சேர்ந்தேன். அங்கே மாணவர் தலைவர், ஹாஸ்டல்ல மாணவிகள் தலைவர் ஆகிய பொறுப்புகள்ல இருந்தேன். அந்தக் காலகட்டத்துல பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்துல சேர்ந்தேன். தனி ஆளா நின்னு போராடறதைவிட அமைப்பா இருந்து போராடினாத்தான் சின்ன அசைவையாவது உண்டாக்க முடியும்னு நம்பினேன். 

“நியாயம் நம்ம பக்கம் இருந்தா ஜெயிக்க முடியும்!”

தொடக்கத்துல போராட்டத்துக்குப் போகக்கூடாதுங்கிற மாதிரியான கட்டுப்பாடுகளை வீட்ல போட்டாங்க. `பொண்ணை நல்லபடியா கல்யாணம் பண்ணிக் கொடுக்கணுமே’ங்கிற கவலை அவங்களுக்கு. நாயக்கன் கொட்டாய்ல நடந்த சாதிப் பிரச்னை போராட்டத்துக்கு வீட்டுல சொல்லாமலே போயிட்டேன். `மனிதர்களை அழிக்கணும்னா, அவங்க பொருளாதாரத்தை அழிச்சா போதும்’கிறதை அங்கேதான் பார்த்தேன். என்னை இன்னும் வலிமையா, சாதிக்கு எதிரா போராடத் தூண்டியது அந்தச் சம்பவம்தான்.

அம்மாவும் அப்பாவும் பயந்தாங்க. `வழக்கமான பெண்களைப்போல என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது... என்னைப்போல அநியாயங்களை எதிர்த்து போராடுற ஒருத்தரோடதான் என்னால வாழ முடியும்’னு அவங்களுக்குப் புரிய வெச்சேன். அதுக்கப்புறம்தான் அப்பாவும் அம்மாவும் என் கல்யாணத்தைப் பத்தி கவலைப்படுறதை நிறுத்தி னாங்க. நான் எப்ப வெளிய கிளம்பினாலும், `எப்ப வருவே, என்ன போராட்டம்’னு ஒரு கேள்வியும் கேட்டதில்ல. என் போராட்டம் எல்லாம் நியாயமானதுதான்னு புரிஞ்சிக்கிட்டாங்க’’ என்கிற வளர்மதி, தனது போராட்டங் கள் குறித்தே தொடர்கிறார்.

‘‘மறியல் பண்றது, துண்டறிக்கை கொடுக்கறதுனு... எந்த அநியாயம் நடந்தாலும் களத்துல நின்னேன். கூடங் குளம் பிரச்னை, நெடுவாசல் போராட்டம், கதிரா மங்கலம்னு எல்லாத்துக்கும் குரல் கொடுத்திருக்கேன். வழக்குகளுக்கும் கைதுகளுக்கும் நான் பயந்ததே இல்லை. இயற்கை வளங்களைப் பாது காக்கறதுக்காக போராடத்தான் துண்டறிக்கை கொடுத்தேன். மாணவர்கள் மத்தியில பயத்தை உருவாக்கத்தான் அரசு என்னைக் குண்டர் சட்டத்துல சிறையில் அடைச்சது.

“நியாயம் நம்ம பக்கம் இருந்தா ஜெயிக்க முடியும்!”

கைதானதும் பல்கலைக் கழகத்துல இருந்து என்னை இடைநீக்கம் செய்ததுகூட மாணவர் போராட்டத்தைத் தடுக்கறதுக்கான ஓர் உத்திதான். என்னைக் குண்டர் சட்டத்துல கைது பண்ணினதுக்காக நான் அரசுக்கு நன்றி சொல்லிக்கிறேன். எவ்வளவு வலிமையான சட்டத்துல தண்டிச்சாலும் நியாயம் நம்ம பக்கம் இருந்தா ஜெயிக்க முடியும்னு இந்தச் சம்பவம் புரிய வெச்சிருக்கு. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக எழுதணும்கிற எண்ணத்துலதான் இதழியல் படிப்புல சேர்ந்தேன். தாய்வழிச் சமூகத்துல தலைநிமிர்ந்து நின்ற பெண்கள், பல ஆண்டு காலமாக வர்க்க அடிமைகளா ஆக்கப்பட்டிருக்காங்க. `என் குழந்தை... என் குடும்பம்’னு மட்டும் வாழ்ந்தா பெண் அந்த அடிமைத்தனத்துல இருந்து வெளியில வரவே முடியாது.  `வழக்குகளை எதிர்கொண்டா, சிறைக்குப் போனா வேலை கிடைக்காது, கல்யாணம் ஆகாது'ன்னு பெண்கள் யோசிக்க வேண்டிய காலம் இது இல்லை. பெண் குழந்தைக்குப் பாதுகாப்பு இல்லை; குழந்தைகளுக்குக் கல்வி உரிமை இல்லை. எல்லா உரிமைகளை இழந்துட்டு சுயநலமா வாழறதையே பாதுகாப்புன்னு கற்பனைதான் பண்ணிக்க முடியும். குடும்ப வாழ்க்கையில பெண்ணுக்கான உரிமைகள் எதுவும் இல்லை. சுயமரியாதைகூட இல்லாம வாழுறது தேவையான்னு பெண்கள் யோசிக்கணும். இந்த ஆணாதிக்க சமூகத்துல தனக்குச் சமமான உரிமைகளைக் கொடுக்குற அமைப்பைப் பெண் கள் உருவாக்கணும்’’ என்று வெடிக்கிறார் வளர்மதி.

‘கண்ணான கண்ணுமணி

கண்ணு ரெண்டும்            
பொன்னுமணி

பொன்னான பூமேனி

உன் பொன்னுடம்பு
எம்மேனி

என்ன வாழ்வு
வாழுறோமடா

எம்மனசு நோகுதடா

செருப்புகூட கொஞ்ச நாள்

ஏ.சி ரூமில் வாழுதடா...

பொன்னான பூமகளே

பூலோகத்த ஆள வேணும்...’


- வளர்மதியின் தாய் கமலா இட்டுக்கட்டிய பாடல் இது... தாயின் கனவை நனவாக்க வீறு நடை போடுகிறார் வளர்மதி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism