Published:Updated:

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: ஜெகதீஷ் டைட்லரை மீண்டும் விசாரிக்க உத்தரவு!

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: ஜெகதீஷ் டைட்லரை மீண்டும் விசாரிக்க உத்தரவு!
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: ஜெகதீஷ் டைட்லரை மீண்டும் விசாரிக்க உத்தரவு!
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: ஜெகதீஷ் டைட்லரை மீண்டும் விசாரிக்க உத்தரவு!

புதுடெல்லி: சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகதீஷ் டைட்லருக்கு தொடர்பில்லை என்ற சிபிஐ-யின் அறிக்கையை நிராகரித்துள்ள டெல்லி நீதிமன்றம், அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

கடந்த  1984 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டவுடன், சீக்கியர்களுக்கு எதிராக டெல்லியில பல்வேறு இடங்களில் கலவரம் நடைபெற்றது. இதில் வடக்கு டெல்லியில் உள்ள சீக்கிய குருத்வாராவில் இருந்த 3 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தை டைட்லர்தான் தூண்டிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
 
இதனையடுத்து இது குறித்து விசாரிக்குமாறு சிபிஐ-க்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி விசாரித்த சிபிஐ, கலவரத்தில் டைட்லருக்கு தொடர்பில்லை என்று கடந்த 2007 ஆம் ஆண்டும், டைட்லர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என்று 2009 ஆம் ஆண்டும் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

##~~##
இதனை எதிர்த்து கலவரத்தில் கொல்லப்பட்ட 3 பேரிகளில் ஒருவரின் மனைவியான லக்விந்தர் சிங் என்பவர் மனு தாக்கல் செய்தார்.அவர் தனது மனுவில், இவ்வழக்கில் முக்கிய சாட்சிகளான இரண்டு பேரின் வாக்குமூலங்களை சிபிஐ பதிவு செய்யவில்லை என்றும், கலவரம் காரணமாக அவர்கள் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்துவிட்டதாகவும், எனவே அவர்களை இந்தியாவுக்கு வரவழைத்து வாக்குமூலம் பெறவேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதனிடையே இவ்வழக்கு கடந்த 4 ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்தபோது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குறிப்பிட்ட சம்பவம் நிகழ்ந்தபோது டைட்லர் இந்திரா காந்தியின் தீன் மூர்த்தி பவனில் இருந்ததாக கூறி, டைட்லருக்கு எதிரான வழக்கை மூடுமாறு கோரி, அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். 
இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்போது சிபிஐ-யின் அறிக்கையை நிராகரித்த நீதிமன்றம், டைட்லருக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவு டைட்லருக்கு பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது.

4 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

இதனிடையே சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின்போது, 2 பேரை எரித்துக்கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 4 பேர்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.