Published:Updated:

`என் நிலத்தை அபகரிக்க முயல்கிறார்!' - அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி மீது மூதாட்டி வழக்கு

`என் நிலத்தை அபகரிக்க முயல்கிறார்!' - அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி மீது மூதாட்டி வழக்கு
`என் நிலத்தை அபகரிக்க முயல்கிறார்!' - அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி மீது மூதாட்டி வழக்கு

அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி 70 வயது மூதாட்டியின் நிலத்தை அபகரிக்க முயல்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம், கெம்பசந்திரம் கிராமத்தில் தனக்குச் சொந்தமான 32.87 ஏக்கர் விவசாய நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி அபகரிக்க முயல்வதாக நிலத்தின் உரிமையாளரான 70 வயது மூதாட்டி அஞ்சனா ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், ``அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி அவரது உறவினர்களுக்காக தன் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயல்கிறார். இந்த நில விவகாரம் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிவில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. ஆனால், அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாவட்ட வருவாய் அதிகாரி மூலம் அவர் உறவினர் பெயருக்கு நிலத்தின் பட்டாவை மாற்றியுள்ளார். இந்த நிலத்தை வேறு பெயரில் பட்டா பதிய தடை விதிக்க வேண்டும்'' என கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், நிலத்தின் பட்டா மாற்றம் செய்யும் நடைமுறையில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.