Published:Updated:

ஆருஷியை கொன்றது அவரது பெற்றோர்தான்: சி.பி.ஐ.

ஆருஷியை கொன்றது அவரது பெற்றோர்தான்: சி.பி.ஐ.
ஆருஷியை கொன்றது அவரது பெற்றோர்தான்: சி.பி.ஐ.
ஆருஷியை கொன்றது அவரது பெற்றோர்தான்: சி.பி.ஐ.

புதுடெல்லி: நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நொய்டா ஆருஷி கொலை வழக்கில், ஆருஷியை கொன்றது அவரது பெற்றோர்தான் என இவ்வழக்கை விசாரித்த சி.பி.ஐ., நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
 
டெல்லியை அடுத்த நொய்டாவை சேர்ந்த டாக்டர் தம்பதிகளான ராஜேஷ் தல்வார், நூபுர் தல்வார் ஆகியோரின் மகள் ஆருஷி (14) மற்றும் அவர்களது வீட்டு வேலைக்காரரான ஹேம்ராஜ், ஆகியோர் கடந்த 2008-ம் ஆண்டு மே 16 ஆம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர்.

இவ்வழக்கில் குற்றவாளிகள் யார் என்பதை போலீசாரால் கண்டறிய முடியாமல் போனது.இதையடுத்து, இந்த வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை நடத்திய சி.பி.ஐ. அதிகாரி ஏ.ஜி.எல். கவுல், இன்று காஸியாபாத்தில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராகி பதில் அளித்தார்.

##~~##
அப்போது அவர், "வெளி ஆட்கள் யாரும் வீட்டுக்குள் வந்து இந்த கொலைகளை செய்யவில்லை. ஆருஷியின் பெற்றோர்களான ராஜேஷ் மற்றும் நூபுர் தல்வார் ஆகிய இருவர் தான் கொலை செய்துள்ளனர்" என்று தெரிவித்தார்.
இந்த இரட்டைக் கொலை வழக்கில் கவுல், 39 ஆவது சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். நாளை நடைபெறும் விசாரணையில் மேலும் சாட்சிகள் ஆஜர்படுத்தப்படுவார்களா இல்லையா என்பது குறித்து சி.பி.ஐ. தகவல் அளிக்கும்.