Published:Updated:

கடற்படை வீரர்கள் மீதான வழக்கு: இத்தாலியின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான இத்தாலி கடற்படை வீரர்கள் மீதான வழக்கை, தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்கக் கூடாது என்ற இத்தாலி அரசின்  கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

கேரள கடற்பகுதியில் இந்திய மீனவர்களை, இத்தாலி கடற்படை வீரர்கள் சுட்டுக் கொன்ற வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்ரத்தில் இத்தாலி அரசு மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் இத்தாலி அரசின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டது.

##~~##
" இந்த வழக்கை புலனாய்வு அமைப்பே விசாரிக்கலாம். இதற்காக சிறப்பு நீதிமன்றம் அமைத்து, தினந்தோறும் வழக்கு விசாரணை நடத்தப்படும். இந்த நீதிமன்றத்தில் வேறு எந்த வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. வழக்கு விசாரணையில், இத்தாலி அரசுக்கு ஏதேனும் குறைபாடு தெரிந்தால், அது குறித்து முறையீடு செய்யலாம்" என்று  உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.