Published:Updated:

சீக்கியர் கலவர வழக்கு: சஜ்ஜன் குமார் நிரபராதி என தீர்ப்புக் கூறிய நீதிபதி மீது ஷூ வீச்சு!

புதுடெல்லி: 1984 ஆம் ஆண்டு நிகழ்ந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு எதிராக தொடரப்பட்ட 3 வழக்குகளில் ஒன்றில், அவர் நிரபராதி என இன்று தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், தீர்ப்பளித்த நீதிபதி மீது ஷூ வீசப்பட்டது.

1984 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் நடந்த கலவரத்தில் 5 பேர் பலியானது தொடர்பான வழக்கின் தீர்ப்பை,  சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று வழங்கியது.

அதில், சஜ்ஜன் குமார் நிரபராதி என்றும், குற்றம்சாட்டப்பட்டுள்ள 5 பேரில் 3 பேர் குற்றவாளிகள் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில், சஜ்ஜன் குமார் நிரபராதி என்று தீர்ப்பளித்த  நீதிபதி மீது ஷூ வீசப்பட்டது. இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நீதிபதி மீது ஷூ வீசிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

##~~##
சஜ்ஜன் குமார் மீது தொடரப்பட்டுள்ள 3 வழக்குகளில், ஒன்றில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இன்னமும் 2 வழக்குகளில் தீர்ப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.