

புதுடெல்லி: 2ஜி வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் தாக்கல் செய்த மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
இது தொடர்பாக கடந்த திங்கட்கிழமையன்று தயாளு அம்மாள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 80 வயதாகும் தயாளு அம்மாள் உடல்நலம் குன்றி படுத்தபடுக்கையாக இருப்பதால், அவரால் வீட்டை விட்டு எழுந்துவந்து நீதிமன்றத்துக்கு வர இயலாது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் அவரது மருத்துவப் பரிசோதனை அறிக்கைகளில் அவர் 'அல்ஸாய்மர்ஸ்' என்ற மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக கடந்த ஒரு வருட காலமாக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவருடைய உடல் நிலை மற்றும் மன நிலையைக் கருத்தில் கொண்டு இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
##~~## |