இருபது ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத் தென்மாவட்ட கடற்கரைகளில் நடந்துவந்த தனியாரின் தாதுமணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது, மத்தியச் சுரங்க அமைச்சகம். இதுதொடர்பாக, தொடர்ச்சியாகக் கட்டுரைகளை ஜூனியர் விகடன் வெளியிட்டுவந்த நிலையில், இப்படி ஓர் அறிவிப்பாணை வந்திருக்கிறது. சரி, என்ன நடந்தது, விரிவாகப் பார்ப்போம்.

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் உள்ள கடற்கரைகளில், கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தாதுமணல் கொள்ளை நடந்துவருவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்தக் கொள்ளை குறித்து, 2015-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில், தமிழக அரசு உயர் அதிகாரிகளான ககன்தீப் சிங் பேடி, சத்யபிரதா சாஹு ஆகியோரின் அறிக்கைகள் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. நீதிமன்ற அறிவுரையாளராக நியமிக்கப்பட்ட வீ.சுரேஷ் என்ற வழக்கறிஞரின் விரிவான அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கைகள் மூலம், தாதுமணல் விவகாரத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகள் அம்பலமாகியுள்ளன. குறிப்பாக, அணு ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் யுரேனியம் 233-ஐ தயாரிக்கத் தேவைப்படும் முக்கிய மூலப்பொருளான ‘மோனசைட்’ (மோனசைட் டெய்லிங்க்ஸ்) என்னும் கனிமம், சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ளது என்ற யூகம், கிட்டத்தட்ட உண்மையாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு விவகாரங்கள் குறித்தும், தாது மணல் கொள்ளை குறித்தும், ‘தாதுமணல் கடத்தல்... அணு ஆயுத ஆபத்து! - அதிரவைக்கும் ஆவணங்கள்’ என்ற தலைப்பில் 4.07.2018 தேதியிட்ட ‘ஜூனியர் விகடன்’ இதழிலிருந்து தொடர்ச்சியாக நான்கு இதழ்களில் விரிவாக எழுதியிருந்தோம். இந்த நிலையில்தான், 20.02.2019 தேதியன்று ‘தாதுமணல் கனிமங்களை இனி தனியார் நிறுவனங்கள் அள்ளக் கூடாது’ என்று அரசிதழிலில் அறிவிப்பாணை (எண்.118) வெளியிட்டுள்ளது மத்தியச் சுரங்க அமைச்சகம்.

இதுகுறித்து சுரங்கத்துறை சார்பான விஷயங்களைக் கையாளும் சட்ட நிபுணர்கள் சிலரிடம் பேசினோம். “ஏற்கெனவே அணுக்கனிமங்கள் சலுகை விதிகள் (AMCR) 2016, ஷெட்யூல் A-ன்படி, அணுக்கனிமங்களை அள்ளுவதற்கான குறைந்தபட்ச மதிப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இதன்படி, கடற்கரை மணல் கனிமங்கள் மற்றும் வண்டல் கனிமப் படிவுகளில் 0.75 சதவிகித அளவுக்குக் குறைவாக மோனசைட் இருந்தால் அதைத் தனியார் நிறுவனங்கள் அள்ளிக்கொள்ளலாம் என்று அனுமதி இருந்தது. மோனசைட்டின் அளவு 0.75 சதவிகித அளவோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருந்தால், அரசு நிறுவனங்கள் மட்டும்தான் அந்தக் கடற்கரை மணல் கனிமங்களை அள்ள முடியும். இந்த மதிப்புகளை, கடந்த பிப்ரவரி 20-ம் தேதி அறிவிப்பாணை மூலம் மறுவரையறை செய்துள்ளது, மத்தியச் சுரங்க அமைச்சகம். இதன்படி கார்னெட், சிலிமனைட், ரூடைல், இல்மினைட், லியூக்கோசீன், ஸிர்கான் மற்றும் மோனசைட் ஆகிய அனைத்துக் கடற்கரை மணல் கனிமங்களுக்குமான குறைந்தபட்ச மோனசைட் எடை சதவிகிதத்தை 0.00% என வரையறுத்துள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால், ‘மோனசைட் இருந்தாலும், இல்லாவிட்டாலும், இனி கார்னெட் உள்ளிட்ட எந்தக் கடற்கரை மணல் கனிமங்களையும் தனியார் நிறுவனங்கள் அள்ள முடியாது’ என்பதுதான். இந்த அறிவிப்பு, தமிழகத்தில் செயல்படும் ‘விவி மினரல்ஸ்’ உள்ளிட்ட சில தனியார் தாது மணல் நிறுவனங்களுக்கு விழுந்த பலத்த அடி என்றே சொல்ல வேண்டும்” என்றனர்.

இந்த அறிவிப்பு ஒருபுறமிருக்க... 2013-ம் ஆண்டிலேயே தாதுமணல் அள்ளவும், தாதுமணல் சரக்கை எடுத்துச்செல்லவும் தமிழக அரசு தடைவிதித்துள்ளது. ஆனால், இந்தத் தடை உத்தரவை அமலுக்குக் கொண்டுவராமல், அதிகாரிகள் உதவியுடன் தாதுமணல் கொள்ளையும், ஏற்றுமதியும் தொடர்ந்து நடந்துவந்தன. உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, 2016-ம் ஆண்டு இறுதியில்தான் தமிழக அரசின் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

அதன்பிறகு, தனியார் நிறுவனங்கள் இருப்பு வைத்திருந்த தாதுமணல் குறித்த விவரங்கள் அனைத்தும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்தன. 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சாஹு குழு அறிக்கையில், ‘தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இயங்கிவரும் தாதுமணல் நிறுவனங்கள், மொத்தம் 1,55,48,680 டன் அளவு கன கனிமங்களைக் கொண்ட தாதுமணலை இருப்பு வைத்திருக்கின்றன. ஆனால், அந்த நிறுவனங்கள் தங்களிடம் 85,58,734 டன் அளவு தாதுமணல் மட்டும்தான் உள்ளது என அறிவித்திருக்கின்றன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“நீதிமன்ற ஆவணங்களின்படி... சாஹு குழு அறிக்கை குறிப்பிடும், ‘1,55,48,680 டன் அளவு தாதுமணலுமே சட்டத்துக்குப் புறம்பாக அள்ளப்பட்டுள்ளது’ என்று நீதிமன்றம் முடிவுக்கு வரவும் வாய்ப்புள்ளது. அப்படி நீதிமன்றம் ஒரு முடிவை எடுக்குமானால், தனியார் நிறுவனங்களிடம் இருக்கும் மொத்தத் தாது மணலும் ‘ஐ.ஆர்.இ.எல்’ (IREL-Indian Rare Earths Limited) போன்ற பொதுத் துறை நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படலாம். மத்திய வர்த்தக அமைச்சகத்தின்கீழ் வரும், அயல்நாட்டு வணிகத்துக்கான தலைமை இயக்ககம் (DGFT), 21.08.2018 தேதியன்று அரசிதழில் ஓர் அறிவிப்பாணை (No.26/2015-2020) வெளியிட்டுள்ளது. அதில், ‘இல்மினைட், ரூடைல், லியூக்கோசீன், ஸிர்கான், மோனசைட், சிலிமனைட் மற்றும் கார்னெட் ஆகிய அனைத்து கடற்கரை மணல் கனிமங்களையும் பொதுத்துறை நிறுவனமான ஐ.ஆர்.இ.எல் மூலம் மட்டுமே ஏற்றுமதி செய்யமுடியும்’ என்று குறிப்பிடப்
பட்டுள்ளது. ஐ.ஆர்.இ.எல் நிறுவனம் ஏற்றுமதி செய்வதற்கும்கூட ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால், இனி அரசுக்குத் தெரியாமல், தாதுமணல் வெளிநாடுகளுக்குக் கடத்தப்படும் வாய்ப்பு இருக்காது” என்கிறார்கள், இவ்வழக்கு விவகாரங்களை உன்னிப்பாகக் கவனித்துவரும் சூழல் ஆர்வலர்கள்.

1948-ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட இந்தியத் தொழில் கொள்கையில் தொடங்கி, கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாகத் தேசியப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அணுசக்தியும் அணுக் கனிமங்களும் பொதுத்துறை நிறுவனங்களின் ஏகபோக உரிமையாகவே இருந்துவந்தன. தாராளமயமாக்கலுக்குப் பிறகு 1998-ம் ஆண்டு அக்டோபர் மாதம், அணுசக்தித் துறையில் கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானம் மூலமாகப் புதிய கொள்கை (Policy on Exploration of Beach Sand Minerals) வகுக்கப்பட்டது. அதன் பிறகுதான், மோனோசைட் தவிர்த்துப் பிற அணுக்கனிமங்களை அள்ளுவது மற்றும் விற்பனை செய்வது போன்றவற்றுக்கான அனுமதி, தனியாருக்கு வழங்கப்பட்டது. சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே அரசு சார்பில் வைக்கப்பட்ட நிபந்தனை. அதன் பிறகுதான் தாதுமணல் கொள்ளை தீவிரமடைந்தது.

தற்போது, இக்கொள்ளைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, தாதுமணல் வணிகம் அரசாங்கத்தின் வசம் வந்துள்ளது. இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தொடர்ந்து போடும் கிடுக்குப்பிடி உத்தரவுகளும் முக்கியக் காரணம். அதனால்தான், இனி தனியார் நிறுவனங்கள் தாது மணல் வர்த்தகத்தில் ஈடுபட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால், தாதுமணல் கொள்ளையும் கடத்தலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

‘உயர் நீதிமன்ற வழக்கு முடிந்து... தனியார் நிறுவனங்கள் மேல்முறையீட்டுக்குச் சென்றாலும், அரசு தாதுமணல் விவகாரத்தில் உறுதியாக இருக்க வேண்டும். அதோடு, பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ளதாகக் கருதப்படும் தாதுமணல் கொள்ளையில் ஈடுபட்ட... விவி மினரல்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, வட்டார அளவிலிருந்து, தேசிய அளவுவரை கொள்ளைக்குத் துணை போன பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகளின் மீதும், சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். இனி ஒருபோதும் தாதுமணல் குத்தகைகள் தனியாருக்குக் கொடுக்கப்படக் கூடாது’ என்பவைதான் சமூக அக்கறை கொண்டவர்களின் எதிர்பார்ப்பு. அதேசமயம், ‘இனி அரசாங்கமேதான் தாது மணலை அள்ளமுடியும் என்று சொல்லப்பட்டாலும், அரசாங்கத்திடமிருந்து நேரடியாகப் பெரும் நிறுவனங்களுக்கு உள்குத்தகைக்கு விடவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இப்படிச் செய்தால் பழையபடி தனியார் கொள்ளை தொடரவே செய்யும்’ என்கிற கவலையான பேச்சுகளும் அலையடிக்கின்றன.

நாட்டின் இயற்கை வளங்கள் எப்போதும் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான் நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லது என்பதைத் தாதுமணல் விவகாரம் நிரூபித்துள்ளது. அரசு புரிந்துகொண்டால் சரி!

- ஜூ.வி டீம்
படங்கள்: எல்.ராஜேந்திரன்