

மும்பை: தமது உயிருக்கு ஆபத்து இருப்பதால் புனே சிறையில் சரணடைய அனுமதிக்க கோரி தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ள சஞ்சய் தத், நாளை தடா கோர்ட்டில் சரணடைகிறார்.
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில், சட்டவிரோதமாக ஆயுதங்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்ததற்காக, சஞ்சய் தத்திற்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்து கடந்த மார்ச் 21 ஆம் தேதியன்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்தது.
இவ்வழக்கில் ஏற்கனவே அவர் 18 மாதங்களை சிறையில் கழித்துவிட்டதால், இன்னும் மூன்றரை ஆண்டுகள் அவர் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டியது உள்ளது.
இந்நிலையில் தாம் நடிப்பதாக ஒப்புக்கொண்ட படப்பிடிப்புகள் பாக்கி இருப்பதால், தண்டனையை அனுபவிப்பதற்காக தாம் சரணடைவதற்கு கால அவகாசம் கோரியிருந்தார் சஞ்சய் தத். அதன்படி அவருக்கு நீதிமன்றம் வருகிற 15 ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்திருந்தது.
இதனிடையே தமக்கு அளிக்கப்பட்ட தண்டனை தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி சஞ்சய் தத் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் நிராகரித்தது.
##~~## |