Published:Updated:

நீதிமன்றத்தில் இன்று சரணடைகிறார் சஞ்சய் தத்

நீதிமன்றத்தில் இன்று சரணடைகிறார் சஞ்சய் தத்
நீதிமன்றத்தில் இன்று சரணடைகிறார் சஞ்சய் தத்
நீதிமன்றத்தில் இன்று சரணடைகிறார் சஞ்சய் தத்

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத்  இன்று மாலை தடை நீதிமன்றத்தி்ல் சரணடைய உள்ளார்.

1993ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், நடிகர் சஞ்சய் தத்திற்கு 5 ஆண்டு காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ஏப்ரல் 16ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சஞ்சய் தத் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருவதால், சரணடைய 6 மாத காலம் அவகாசம் கோரி சஞ்சய் தத் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சரணடைய நான்கு வார கால அவகாசம் அளித்தது.

அந்த அவகாசம் நாளையுடன் முடியவுள்ள நிலையில், மேலும் அவகாசம் அளிக்குமாறு, சஞ்சய் தத்தை வைத்து படம் தயாரித்து வருவோர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் நிராகரித்தது.

இந்த நிலையில், நேரடியாக சிறையிலேயே சரணடைய அனுமதிக்க வேண்டும் என்று தடா நீதிமன்றத்தில் சஞ்சய் தத் தாக்கல் செய்த மனு வாபஸ் பெறப்பட்டது.

##~~##
இதனிடையே, மும்பை தடா நீதிமன்றத்தில் சஞ்சய்தத் இன்று மாலை சரணடைவார் என்று அவரது வழக்கறிஞர் சுபாஷ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மும்பை ஆர்தர் சாலையில் உள்ள சிறைக்கு பெயர் குறிப்பிடப்படாமல் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், சிறைத்தண்டனையை ஏற்கும் சஞ்சய்தத்தை சிறையிலேயே கொல்லப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், சிறையில் நடிகர் சஞ்சய் தத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று சிறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.