Published:Updated:

மும்பை தடா நீதிமன்றத்தில் சரணடைந்தார் சஞ்சய் தத்!

மும்பை தடா நீதிமன்றத்தில் சரணடைந்தார் சஞ்சய் தத்!
மும்பை தடா நீதிமன்றத்தில் சரணடைந்தார் சஞ்சய் தத்!
மும்பை தடா நீதிமன்றத்தில் சரணடைந்தார் சஞ்சய் தத்!

மும்பை: மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை அனுபவிப்பதற்காக நடிகர் சஞ்சய் தத், இன்று மதியம் மும்பை தடா நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இன்று மதியம் 1.35 மணி அளவில் தனது வீட்டிலிருந்து மனைவி மன்யாதா மற்றும் தயாரிப்பாளர் மகேஷ் பட் ஆகியோருடன் காரில் நீதிமன்றத்திற்கு புறப்பட்டார் சஞ்சய் தத். அவரது காருக்கு பின்னால் சஞ்சய் தத்தின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 15 கார்களில் பின்தொடர்ந்தனர். அதற்கு பின்னால் தொலைக்காட்சி நிருபர்களின் கார்களும் பின் தொடர்ந்து சென்றன.

இந்நிலையில் 2.35 மணி அளவில் தடா நீதிமன்றத்திற்குள் நுழைந்த சஞ்சய் தத், அங்கு நீதிபதியின் முன்னர் சரணடந்தார்.

##~~##
சஞ்சய் தத் சரணடைய வந்ததையொட்டி ஏராளமான பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கேமராமேன்கள் நீதிமன்ற வளாகத்தில் குவிந்ததால், சஞ்சய் தத் காரிலிருந்து இறங்கி நீதிமன்றத்திற்குள் செல்லும்போது போலீசார் அவர்களை கட்டுப்படுத்திட மிகுந்த சிரமப்பட்டனர்.  
இந்நிலையில் சஞ்சய் தத் சரணடைந்ததை தொடர்ந்து, அவர் புனே எரவாடா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட உள்ளார்.