Published:Updated:

ஆருஷி கொலை வழக்கு: தல்வாரின் மனு தள்ளுபடி

ஆருஷி கொலை வழக்கு: தல்வாரின் மனு தள்ளுபடி
ஆருஷி கொலை வழக்கு: தல்வாரின் மனு தள்ளுபடி
ஆருஷி கொலை வழக்கு: தல்வாரின் மனு தள்ளுபடி

அலகாபாத்: ஆருஷி கொலை வழக்கு குற்றவாளிகளான ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் தம்பதியர் தாக்கல் செய்த மனுவை அலகாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஆருஷி மற்றும் வீட்டு பாதுகாவலரான ஹேம்ராஜ் ஆகியோரை கொலை செய்ததாக ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவ்வழக்கு நடைபெற்று வரும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தல்வார் தம்பதியர் தாக்கல் செய்த மனுவில், முக்கிய சாட்சிகள் 14 பேரது விளக்கங்களை பதிவு செய்ய வேண்டும் என்றும், அந்த சாட்சியில், அப்பொழுது சி.பி.ஐ. இணை இயக்குனராக இருந்த அருண் குமாரது விளக்கத்தையும் சேர்க்க வேண்டும் என்றும் கோரி இருந்தனர். 

##~~##
இந்நிலையில் இந்த மனுவினை இன்று விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.