Published:Updated:

நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த்

நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த்
நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த்
நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த்

புதுடில்லி : "நான் அப்பாவி; எந்த தவறும் செய்யவில்லை. நான் ஒருபோதும் எந்த ஸ்பாட் பிக்சிங்கிலும் ஈடுபடவில்லை" என இந்திய பிரிமியர் லீக் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஸ்ரீசாந்த் கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.

இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து 3 வீரர்களும் அணியில் இருந்து நீக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஸ்ரீசாந்த் நேற்று டில்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு விசாரணையின்போது ஸ்ரீசாந்த் கூறியதை அவரது வழக்கறிஞர் ரிபிக்கா ஜான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

##~~##
அப்போது அவர் கூறும்போது, ''நான் எந்த ஸ்பாட் பிக்சிங்கிலும் ஈடுபடவில்லை. அர்ப்பணிப்பு உணர்வுடனும், முழுமனதுடனுமே போட்டியில் கலந்து கொண்டேன். நான் அப்பாவி. எனது வாழ்க்கையில் இது சோதனை காலம். நமது சட்டத்துறையின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. நான் அப்பாவி என்பதை நிரூபிப்பேன் என எனக்கு நம்பிக்கை உள்ளது. எனது நேர்மை மற்றும் மதிப்பை திரும்பபெறுவேன்'' என ஸ்ரீசாந்த் தெரிவித்ததாக அவரது வழக்கறிஞர் கூறினார்.
இந்நிலையில், 'இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் ஸ்பாட் பிக்சிங் மூலம் பெற்ற பணத்தை கொண்டு மும்பையில் ஒரே நாளில் ரூ.1.95 லட்சத்திற்கு உடைகள் மற்றும் பிளாக்பெரி ஸ்மார்ட் போன் ஆகியவற்றை வாங்கிய ஸ்ரீசாந்த், அவற்றை தனது காதலிக்கு பரிசாக அளித்துள்ளார் என டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.