Election bannerElection banner
Published:Updated:

`ஆறுமுகசாமி ஆணையத்துக்குப் போதிய நிபுணத்துவம் இல்லை!’ - அப்போலோ குற்றச்சாட்டு

`ஆறுமுகசாமி ஆணையத்துக்குப் போதிய நிபுணத்துவம் இல்லை!’ - அப்போலோ குற்றச்சாட்டு
`ஆறுமுகசாமி ஆணையத்துக்குப் போதிய நிபுணத்துவம் இல்லை!’ - அப்போலோ குற்றச்சாட்டு

`ஆறுமுகசாமி ஆணையத்துக்குப் போதிய நிபுணத்துவம் இல்லை!’ - அப்போலோ குற்றச்சாட்டு

ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமிக்கு மருத்துவ சிகிச்சை தொடர்பான போதிய நிபுணத்துவம் இல்லை என்று அப்போலோ மருத்துவமனை சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளது.

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை விதிக்கக் கோரி அப்போலோ மருத்துவமனை சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போலோ மருத்துவமனை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம், ``ஆணையத்தின் விசாரணை வரம்பை மீறி நடத்துகிறது.

மருத்துவத்தில் நிபுணத்துவம் பெறாத ஆணையம், நிபுணத்துவம் பற்றி விசாரணை நடத்துவது தவறு. போதிய நிபுணத்துவம் இருந்தால் மட்டுமே அது பற்றி அறிந்திருக்க முடியும்’ என வாதிட்டார். தொடர்ந்து இன்று அப்போலோ மருத்துவமனை சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதாடுகையில், ``அப்போலோ மருத்துவமனைக்கு எதிராக திட்டமிட்டு, பழி சுமத்தும் நோக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. 


சிகிச்சையின் போது, ஜெயலலிதா பழரசங்கள் மட்டுமே அருந்தியதாக தெரிவித்த அப்போலோ நிர்வாகம், சிகிச்சை அளிக்கப்பட்ட 75 நாள்களும் அரசு அதிகாரிகள், அமைச்சர்களின் எடுபிடிகள், காவல்துறையினர் என இரு நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மூன்று வேளையிம் உணவு வழங்கப்பட்டதாலேயே உணவுக் கட்டணம் ரூ.1,15,000,00 ஆனதாக விளக்கமளித்தார். ஆறுசாமி ஆணையத்தின் இந்தச் செயல்பாட்டால் அப்போலோ நிர்வாகம் மற்றும் சசிகலா ஆகியோர் தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்களாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பி.எஸ்.ராமன், தங்கள் மருத்துவர்களிடம் விசாரணை நடத்த மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதிகள் நாளை ஒத்திவைத்தனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு