Published:Updated:

'நானாவது ரெண்டு மார்க் எடுத்தேன்' - நீதிபதி தேர்வில் பங்கேற்றவர் பகிரும் சுவாரஸ்யம்

'நானாவது ரெண்டு மார்க் எடுத்தேன்' - நீதிபதி தேர்வில் பங்கேற்றவர் பகிரும் சுவாரஸ்யம்
News
'நானாவது ரெண்டு மார்க் எடுத்தேன்' - நீதிபதி தேர்வில் பங்கேற்றவர் பகிரும் சுவாரஸ்யம்

"நூத்தி ஐம்பது மார்க்குக்கு, இரண்டே இரண்டு மார்க் எடுத்து, வீட்ல குழந்தை, குட்டிகளுக்குக்கூட தெரியாம பதுங்கிக்கிட்டு இருக்கேன். எங்கிட்டபோய் கேக்கறீங்களே... என்னத்தச் சொல்றது" என அலுத்துக்கொண்டு அமைதியானவர்,

மிழகத்தில், கடந்த சில தினங்களுக்கு முன் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. 95.2 சதவிகித மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழக மாணவ-மாணவியர் தேர்வில் அசத்தியிருக்கிறார்கள் என்பதைத்தான், ஒப்பீடுகள் நமக்கு உணர்த்துகின்றன. தேர்வு முடிவுகள் வெளியானதிலிருந்து, நம் மாணவர்களை நாம் உச்சிமுகர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில்... இன்னொருபுறம், தமிழகத்தில் நீதிபதி பதவிக்குத் தேர்வு எழுதிய 3,700 வழக்கறிஞர்களில் ஒருவர்கூட தேர்ச்சிபெறவில்லை என்கிற செய்தி நமக்கு அதிர்ச்சியாகவும் அதேநேரம் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.

ஏப்ரல் 4-ம் தேதி, தமிழகத்திலுள்ள 31 மாவட்டங்களில், மாவட்ட நீதிபதிகளை நியமிப்பதற்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில்தான் ஒருவர்கூட தேர்ச்சிபெறாமல் ஃபெயில் ஆகியிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, 95 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் நெகட்டிவ் (மைனஸ்) மதிப்பெண் எடுத்திருக்கிறார்கள். ஜீரோவுக்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்கள், அதிகபட்சம் 30 பேர் மட்டுமே இருப்பார்கள். நீதிபதி பதவியில் உட்காருவதற்காக நடத்தப்பட்ட தேர்வுக்கு, எந்தவித முன்தயாரிப்பும் இல்லாமல் எழுதினார்களா என்ற கேள்வி எழுகிறது.

'நானாவது ரெண்டு மார்க் எடுத்தேன்' - நீதிபதி தேர்வில் பங்கேற்றவர் பகிரும் சுவாரஸ்யம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இத்தனைக்கும், இந்தத் தேர்வு எழுத எல்லோருக்கும் அனுமதி கிடையாது. இது, மாவட்ட நீதிபதிக்கான தேர்வு என்பதால், ஏற்கெனவே துணை நீதிபதியாக இருப்பவர்கள், மாஜிஸ்திரேட்டாக இருப்பவர்கள் அல்லது ஏழு வருடத்திற்கும் மேல் அனுபவம் உள்ள வழக்கறிஞர்கள் போன்ற இந்த வகையில் ஏதோ ஒன்றில் பொருந்துபவர்கள் மட்டுமே எழுத முடியும். இப்படியான ஓர் அமைப்பில் தேர்வு எழுதிய அனைவரும் எப்படி தேர்ச்சிபெற முடியாமல் தோல்வி அடைந்தனர் என்கிற கேள்வி அழுத்தமாக எழுந்ததன் பொருட்டு, தேர்வு எழுதிய வழக்கறிஞர் ஒருவரிடம் இதுகுறித்துப் பேச முயன்றோம். அப்படிப்பட்ட வழக்கறிஞர் ஒருவர், தன் அடையாளம் வேண்டாம் என்கிற நிபந்தனைகளோடு நம்மிடம் பேசினார்.

"நூத்தி ஐம்பது மார்க்குக்கு, நானே இரண்டே இரண்டு மார்க் எடுத்து, வீட்ல குழந்தை குட்டிகளுக்குக்கூட தெரியாம பதுங்கிக்கிட்டு இருக்கேன். எங்கிட்டபோயி கேக்றீங்களே... என்னத்தச் சொல்றது?" என அலுத்துக்கொண்டு அமைதியானவர், தொடர்ந்து பேசினார்.

'நானாவது ரெண்டு மார்க் எடுத்தேன்' - நீதிபதி தேர்வில் பங்கேற்றவர் பகிரும் சுவாரஸ்யம்

"மாவட்ட நீதிபதிகளுக்கான இந்தத் தேர்வை சென்னை உயர் நீதிமன்றம்தான் நடத்தும். ரொம்பக் காலமாகத் தேர்வு நடத்தப்படாமலேயே இருந்தது. சரியா சொல்லப்போனா, ஆறு வருஷம் கழிச்சு, போன மாசம்தான் இந்தத் தேர்வு நடந்தது. இதுல பாஸ் ஆகிட்டா, அப்புறம் இன்னும் ஒரே ஒரு எக்ஸாம். அதுக்கு அப்புறம் ஃபைனல் இன்டர்வியூ. ஆர்வப்பட்டு நிறையப்பேர் அப்ளை பண்ணாங்க. நீதிபதி ஆயிடலாம்ங்கிற அங்கலாய்ப்புல நானும் அப்ளை பண்ணி, அந்தத் தேர்வை எழுதினேன். கேள்வித்தாளைப் பார்த்ததும், எதுக்குமே பதில் தெரியலைன்னாகூட பரவாயில்ல. எது கேள்வின்னே எனக்குத் தெரியல. ரொம்பக் குழப்பமாப்போச்சு.

புதுப்புது சட்டங்கள்ல இருந்தெல்லாம் கேட்டிருக்காங்க. நிறைய கேஸ் ஸ்டடிஸா கேட்டு வெச்சிருக்காங்க. முக்காவாசி கேள்விகள் அவுட் ஆஃப் சிலபஸ். நானாவது பரவாயில்ல, ரெண்டு மார்க் வாங்கியிருக்கேன். எக்ஸாம் எழுதின மூவாயிரத்து அறுநூற்றுக்கும் மேற்பட்டவர்கள்ல 95 சதவிகிதம் பேர் ஜீரோ, ஜீரோவுக்கும் குறைவான மார்க் வாங்கி இருக்காங்க. ஜீரோவுக்கும் குறைவுன்னா, அதாவது நெகட்டிவ் மார்க். எனக்குத் தெரிஞ்ச ஒரு வழக்கறிஞர், நூத்தி ஐம்பதுக்கு மைனஸ் நாப்பது மதிப்பெண் வாங்கியிருக்கார்னா பார்த்துக்கோங்க. எனக்கு இப்போ இருக்கிற ஒரே ஆறுதல், என்னைவிட குறைவா மார்க் எடுத்தவங்கதான். இந்த ரெண்டு மார்க் எடுத்த கர்வத்தோடதான் இன்னைக்கு ஹைகோர்ட்ல அவங்கள சந்திச்சேன். ஆனா, அந்த ரெண்டு மார்க் எப்படி எடுத்தேன்னு இப்போவரைக்கும் எனக்குத் தெரியல" என்றார் அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாய்.