Published:Updated:

மாணவி பாலியல் வழக்கில் 4 பேருக்கு தூக்கு: டெல்லி உயர் நீதிமன்றத்தி்ல் நாளை முதல் விசாரணை!

விகடன் விமர்சனக்குழு

புதுடெல்லி: மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் 4 பேருக்கும் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நாளை முதல் தினமும் விசாரணை நடைபெறுகிறது.

கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி டெல்லியில் 23 வயது மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

டிசம்பர் 29ஆம் தேதி மாணவி சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

##~~##
டெல்லி விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை உறுதிப்படுத்த டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு, விரைவு நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது.
இதையடுத்து, 4 பேருக்கும் விதிக்கப்பட்ட மரணத் தண்டனை குறி்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் நாளை முதல் தினமும் விசாரணை நடக்கிறது.