Published:Updated:

ரஷீத் மசூத்திற்கான தண்டனை இன்று அறிவிப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ரஷீத் மசூத்திற்கான தண்டனை இன்று அறிவிப்பு!
ரஷீத் மசூத்திற்கான தண்டனை இன்று அறிவிப்பு!

ரஷீத் மசூத்திற்கான தண்டனை இன்று அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ரஷீத் மசூத்திற்கான தண்டனை இன்று அறிவிப்பு!

புதுடெல்லி: ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி. ரஷீத் மசூத்திற்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.

தற்போதைய காங்கிரஸ் எம்.பி.யாக இருக்கும் ரஷீத் மசூத், வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசில் சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தார். இவர் மீது 1990-91 ஆம் ஆண்டில் தகுதி இல்லாதவர்களுக்கு மருத்துவப் படிப்பிற்கான இடங்களை வழங்கியதாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ரஷீத் மசூத் குற்றவாளி என கடந்த 20 ஆம் தேதி டெல்லி சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி ஜே.பி.எஸ்.மாலிக் தீர்ப்பு அளித்தார். ஆனால் ரஷீத்துக்க்கான தண்டனையை சி.பி.ஐ. நீதிபதி அறிவிக்கவில்லை.

இந்நிலையில், டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் இன்று, ரஷீத் மசூத்கான தண்டனை விவரங்களை அறிவிக்கவுள்ளது. அதில், ரஷீத் மசூத்துக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது..

குற்ற வழக்கில் அரசியல்வாதி ஒருவர் தண்டிக்கப்பட்டால், தண்டனை விதிக்கப்பட்ட நாளிலேயே அவர் தனது எம்.பி., எம்.எல்.ஏ., பதவியை இழந்துவிடுவார் என உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதன்படி, ரஷீத் மசூதுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், அவர்தான் முதல் எம்.பி. பதவியை இழக்கும் அரசியல்வாதியாக இருப்பார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு