Published:Updated:

நடிகர் சஞ்சய் தத் 14 நாட்கள் பரோலில் விடுவிப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நடிகர் சஞ்சய் தத் 14 நாட்கள் பரோலில் விடுவிப்பு!
நடிகர் சஞ்சய் தத் 14 நாட்கள் பரோலில் விடுவிப்பு!

நடிகர் சஞ்சய் தத் 14 நாட்கள் பரோலில் விடுவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நடிகர் சஞ்சய் தத் 14 நாட்கள் பரோலில் விடுவிப்பு!

புனே: மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, புனே சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் , மருத்துவ சிகிச்சைக்காக 14 நாட்கள் பரோலில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கால் வலிக்காக மருத்துவ சிகிச்சை பெற, தம்மை பரோலி விடுவிக்கக் கோரி சஞ்சய் தத் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவை பரிசீலித்த சிறை நிர்வாகம், சஞ்சய் தத்தின் கோரிக்கையை ஏற்று அவரை 14 தினங்கள் பரோலில் செல்ல அனுமதி அளித்தது. 

இதனைத் தொடர்ந்து சஞ்சய் தத், இன்று மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்," எனக்கு எல்லா வகையிலும் ஆதரவளிக்கும் எனது ரசிகர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது எனது குடும்பத்தினருடன் சிறிது நேரம் செலவிட விரும்புகிறேன்.

நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன். இந்திய நீதிமன்றத்தையும், சட்டத்தையும் நான் மதிக்கிறேன். எனது பரோல் காலம் முடிவடைந்ததும், மீண்டும் சிறைக்கு திரும்புவேன்" என்றார்.

##~~##

சஞ்சய் தத் தம்மை பரோலில் விடுவிக்க கோரி, கடந்த  ஆகஸ்ட் மாதமே சிறை நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு