Published:Updated:

சிறையில் கருப்பு பூனை படை பாதுகாப்பு கோரிய லாலு; நீதிமன்றம் நிராகரிப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சிறையில் கருப்பு பூனை படை பாதுகாப்பு கோரிய லாலு; நீதிமன்றம் நிராகரிப்பு!
சிறையில் கருப்பு பூனை படை பாதுகாப்பு கோரிய லாலு; நீதிமன்றம் நிராகரிப்பு!

சிறையில் கருப்பு பூனை படை பாதுகாப்பு கோரிய லாலு; நீதிமன்றம் நிராகரிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சிறையில் கருப்பு பூனை படை பாதுகாப்பு கோரிய லாலு; நீதிமன்றம் நிராகரிப்பு!

ராஞ்சி: கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவ், தனக்கு சிறையில் கருப்பு பூனை படை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் உள்ளிட்ட 45 பேர் குற்றவாளிகள் என ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

தண்டனை தீர்ப்பு வருகிற 3 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், லாலு நேற்று குற்றவாளி என அறிவிக்கப்பட்ட உடனேயே கைது செய்யப்பட்டு, பிர்ஸா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே மத்திய ரயில்வே அமைச்சராகவும் பதவி வகித்த லாலுவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் விடுத்த வேண்டுகோளை ஏற்று மத்திய அரசால், 30 கமாண்டோக்கள் கொண்ட கருப்பு பூனை படையினரின் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

##~~##
இந்நிலையில் சிறையிலும் தமக்கு கருப்பு பூனை படையினரின் பாதுகாப்பு தொடர வேண்டும் என தீர்ப்புக்கு பின்னர், சிபிஐ நீதிமன்றத்தில் லாலு கோரிக்கை விடுத்தார்.
ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு