Published:Updated:

பாலியல் புகாரில் சிக்கிய நீதிபதிகளுக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு!

Vikatan Correspondent
பாலியல் புகாரில் சிக்கிய நீதிபதிகளுக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு!
பாலியல் புகாரில் சிக்கிய நீதிபதிகளுக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு!
பாலியல் புகாரில் சிக்கிய நீதிபதிகளுக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு!

புதுடெல்லி: ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு எதிரான பாலியல் புகாரை விசாரிக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஏ.கே.கங்குலி மீது பயிற்சி வழக்கறிஞர் ஒருவர் பாலியல் புகார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் மேற்கு வங்க மாநில மனித ஆணையத் தலைவராக இருந்த கங்குலி தனது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார்.

பாலியல் புகாரில் சிக்கிய நீதிபதிகளுக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு!

இதனிடையே, ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு எதிரான புகாரை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இந்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மேலும் ஒரு உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சுவதேந்தர் குமார் மீது பயிற்சி பெண் வழக்கறிஞர் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தற்போது, சுவதேந்தர் குமார் பசுமை தீர்ப்பாயத்தில் உறுப்பினராக இருக்கிறார். தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.

##~~##
இந்நிலையில், நீதிபதி சுவதேந்தர் குமார் மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த தனி குழு ஒன்றை அமைக்க கோரி பாதிக்கப்பட்ட பயிற்சி வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ள உச்ச நீதிமன்றம், மனு வரும் 15ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று கூறியுள்ளது.