Published:Updated:

உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்: இடைக்கால தடை நீக்கம்!

Vikatan Correspondent
உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்: இடைக்கால தடை நீக்கம்!
உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்: இடைக்கால தடை நீக்கம்!
உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்: இடைக்கால தடை நீக்கம்!

புதுடெல்லி: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பான இடைக்கால தடையை தற்காலிகமாக நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 12 பேர் அடங்கிய நீதிபதிகள் பட்டியல் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்த புதிய பட்டியலை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் காந்தி வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி, தற்போதைய நிலையே நீடிக்க உத்தரவிட்டிருந்தார்.

##~~##
இதையடுத்து, உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விசாரணை செய்த நீதிபதி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டார்.

மேலும், வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு 4 வாரத்திற்குள் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.