Published:Updated:

சஞ்சய்தத்துக்கு மீண்டும் மீண்டும் பரோல்: நீதிமன்றம் கேள்வி

Vikatan Correspondent
சஞ்சய்தத்துக்கு மீண்டும் மீண்டும் பரோல்:  நீதிமன்றம் கேள்வி
சஞ்சய்தத்துக்கு மீண்டும் மீண்டும் பரோல்: நீதிமன்றம் கேள்வி
சஞ்சய்தத்துக்கு மீண்டும் மீண்டும் பரோல்:  நீதிமன்றம் கேள்வி

மும்பை: நடிகரும், மும்பை வெடிகுண்டு வழக்கில் தண்டனை பெற்றவருமான சஞ்சய்தத்துக்கு, மூன்றாவது முறையாக பரோல் நீட்டிப்பு கொடுக்கப்பட்டுள்ளது குறித்து மகாராஷ்ட்ரா அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. 

சஞ்சய்தத்துக்கு தொடர்ந்து பரோல் நீட்டிப்பு செய்யப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம்,"'ஒரு தண்டனை கைதிக்கு, எந்த விதிமுறைப்படி, 105 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது? என்று கேள்வி எழுப்பியதோடு, அது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யுமாறு மகாராஷ்ட்ரா அரசுக்கு உத்தரவிட்டது.

இதனிடையே மத்திய உள்துறை அமைச்சகமும், இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு மகாராஷ்ட்ரா அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.