Published:Updated:

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்!

Vikatan Correspondent
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்!

புதுடெல்லி: பாஜக மூத்த தலைவர் நிதின் கட்ரி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஊழல் அரசியல்வாதிகளின் பட்டியல் ஒன்றை டெல்லியில் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டார். அதில், பாரதிய ஜனதா முன்னாள் தலைவர் நிதின் கட்கரி பெயர் இடம் பெற்றிருந்தது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், குற்றவியல் சட்டப்படி டெல்லி பெருநகர நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில், தனது மதிப்பை கெடுத்து, நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டை கெஜ்ரிவால் சுமத்தியிருப்பதாக கட்கரி கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனு மீது விளக்கம் அளிக்குமாறு கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏப்ரல் 7 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு நீதிபதி கோமதி மனோச்சா உத்தரவி்ட்டார்.