Published:Updated:

வெளிநாட்டிலிருந்து பணம்: பா.ஜ. - காங்கிரஸ் பதிலளிக்க உத்தரவு!

Vikatan Correspondent
வெளிநாட்டிலிருந்து பணம்: பா.ஜ. - காங்கிரஸ் பதிலளிக்க  உத்தரவு!
வெளிநாட்டிலிருந்து பணம்: பா.ஜ. - காங்கிரஸ் பதிலளிக்க உத்தரவு!
வெளிநாட்டிலிருந்து பணம்: பா.ஜ. - காங்கிரஸ் பதிலளிக்க  உத்தரவு!

புதுடெல்லி: வெளிநாட்டில் இருந்து பணம் வந்தது தொடர்பான வழக்கில் அரசியல் கட்சிகள் ஒருவாரத்தில் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமாக அரசியல் கட்சிகளுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருவது தொடர்பாக பொதுநல மனு ஒன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், ''பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இங்கிலாந்தை தலைமை இடமாகக் கொண்ட நிறுவனத்திடம் இருந்து பணம் வந்திருக்கிறது. எனவே, அரசியல் கட்சிகளுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்தது தொடர்பாக உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு விசாரணை அல்லது சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும்'' எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது. இதை விசாரித்த நீதிபதி, ''சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள், தேர்தல் கமிஷன் மற்றும் மத்திய அரசு ஒரு வாரத்திற்குள் இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை ஒத்தி வைத்தார்.