Published:Updated:

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் நீதிமன்றம் கெடு!

விகடன் விமர்சனக்குழு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் நீதிமன்றம் கெடு!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் நீதிமன்றம் கெடு!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் நீதிமன்றம் கெடு!

காந்தி நகர்: ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, குஜராத்தில் பிரசாரம் மேற்கொள்ள சென்ற ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத்தின் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யப்போவதாக கூறினார். அப்போது அங்கு தேர்தல் விதிமுறைகளை மீறியதாக காந்தி நகர் காவல்துறையினர் கெஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்தனர்.

அரவிந்த் கெஜ்ரிவால் மீதான இந்த வழக்கு இன்று (16ஆம் தேதி) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் 10 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என கெடு விதித்து உத்தரவிட்டார்.