Published:Updated:

நீதிபதிகள் நியமனம்: கொலிஜியம் முறையை நீக்குவதற்கு எதிரான வழக்கு 25 ல் விசாரணை!

புதுடெல்லி: நீதிபதிகள் நியமனத்திற்கான கொலிஜியம் முறையை நீக்குவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை வரும் 25 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
 
கொலிஜியம் அமைப்பை நீக்கி விட்டு, தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தின் கீழ் புதிய அமைப்பை ஏற்படுத்துவதற்கான சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், கொலிஜியம் அமைப்பை நீக்குவது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது எனக்கூறி, நான்கு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிஸ்வஜித், பட்டாச்சாரியா, வழக்கறிஞர்கள் ஆர்.கே.கபூர், மனோகர் லால் ஷர்மா, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் இந்த வழக்குகளை தாக்கல் செய்தனர்.

கொலிஜியம் அமைப்பு நீக்கப்பட்டால் நீதித்துறையின் சுதந்திரத்தன்மை பாதிக்கப்படும் என்று அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த மனுவுக்கு முக்கியத்துவம் அளித்து துரிதமாக விசாரிக்கப்பட வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று,  வரும் 25ஆம் தேதி மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தலைமை நீதிபதி ஆர்எம்.லோதா தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது.