Published:Updated:

`தாயின் முடிவும், குழந்தையின் வாழ்வும் முக்கியம்'; 33 வார கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி!

Abortion ( pixabay )

கர்ப்பத்தைத் தொடர்வதாலோ அல்லது கலைப்பதாலோ பெண்ணுக்கு ஏற்படும் ஆபத்துகள் என்ன, கருத்தில் கொள்ள வேண்டிய வேறு ஏதேனும் காரணிகள் உள்ளனவா, வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய காரணிகள் உள்ளனவா என்பதைக் மருத்துவக் குழுக்கள் குறிப்பிட வேண்டும்.

Published:Updated:

`தாயின் முடிவும், குழந்தையின் வாழ்வும் முக்கியம்'; 33 வார கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி!

கர்ப்பத்தைத் தொடர்வதாலோ அல்லது கலைப்பதாலோ பெண்ணுக்கு ஏற்படும் ஆபத்துகள் என்ன, கருத்தில் கொள்ள வேண்டிய வேறு ஏதேனும் காரணிகள் உள்ளனவா, வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய காரணிகள் உள்ளனவா என்பதைக் மருத்துவக் குழுக்கள் குறிப்பிட வேண்டும்.

Abortion ( pixabay )

பிறக்கும் பிஞ்சு உயிர், எவ்வித உடல்நலக் கோளாறுகளும் இன்றி, எவ்வித நோயும் இன்றி பூமிக்கு வர வேண்டும் என்பதுதான் ஒரு தாயின் விருப்பமாக இருக்கும். என்னதான் தொடர்ச்சியாக மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டாலும், குழந்தைகள் சில நேரத்தில் குறைபாடுகளோடு பிறப்பதுண்டு. 

தாயின் வயிற்றில் இருக்கும்போதே குழந்தைக்கு ஏதாவது குறைபாடு இருந்தால், மருத்துவ அறிவுரையின்படி கருவைக் கலைத்து  விடலாம். அதுவும் மருத்துவ கருக்கலைப்பு சட்டத்தின்படி, 24 வாரங்கள் ஆன கருவை மட்டுமே கலைக்க முடியும். 

`தாயின் முடிவும், குழந்தையின் வாழ்வும் முக்கியம்'; 33 வார கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி!

இந்நிலையில் தான், தனது வயிற்றில் வளரும் சிசுவிற்குப் பெருமூளை கோளாறுகள் ஏற்படுவதற்கான சாத்தியம் இருப்பதால், தனது 33 வாரக் கருவைக் கலைக்க அனுமதி கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகி இருக்கிறார் ஒரு பெண். 

இம்மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரதிபா எம். சிங் கூறுகையில், ``இதுபோன்ற வழக்குகளில் தாயின் இறுதி முடிவின் விருப்பத்தையும், பிறக்காத குழந்தையின் கண்ணியமான வாழ்வின் சாத்தியத்தையும் அங்கீகரிக்க வேண்டும். இந்த இரண்டு காரணங்களையும் பார்க்கும்போது, தாயின் இம்முடிவு முற்றிலும் நேர்மையான முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

பிறக்காத அந்தக் குழந்தை கண்ணியமான மற்றும் தன்னிறைவான வாழ்வை நடத்துவதற்கு ஆபத்துகள் உள்ளது என மருத்துவ அறிக்கை கூறுகிறது. எனவே தற்போதைய வழக்கில் 33 வார கருக்கலைப்பு அனுமதிக்கப்படுகிறது. 

லோக் நாயக் ஜெய்பிரகாஷ் மருத்துவமனையில், குழந்தைக்கு ஏற்படவிருக்கும்  அசாதாரணங்களை மதிப்பீடு செய்ய ஒரு மருத்துவக் குழுவை, முன்பு உயர்நீதிமன்றம் அமைத்திருந்தது. குழந்தையின் பிறப்புக்குப் பின் ஏற்படும் குறைபாடுகள் அல்லது வாழ்க்கைத்தரம் குறித்து மருத்துவ வாரியம் திட்டவட்டமான மதிப்பீட்டை வழங்கவில்லை. 

`தாயின் முடிவும், குழந்தையின் வாழ்வும் முக்கியம்'; 33 வார கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி!

எனவே இதுபோன்ற வழக்குகளில் மருத்துவக்குழுவின் கருத்து நீதிமன்றத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தது. குழுவால் கருத்து தெரிவிக்கப்பட வேண்டிய சில நிலையான காரணிகள் வழக்குகளில் இருக்க வேண்டும். அத்தகைய காரணிகள் கருவின் மருத்துவநிலையை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அதனுடன் இணைக்கப்பட்ட சில மருத்துவ விளக்கங்களுடன், சாதாரண நபர்களின் சொற்களில் விளங்க வைக்கும்படி இருக்க வேண்டும்.

மருத்துவக் குழுக்கள், சம்பந்தப்பட்ட பெண்ணுடன் இணக்கமான முறையில் தொடர்பு கொண்டு, அவளது உடல் மற்றும் மன நிலையை மதிப்பீடு செய்து, கருத்தை அதன் அறிக்கையில் சேர்க்க வேண்டும். கர்ப்பத்தைத் தொடர்வதாலோ அல்லது கலைப்பதாலோ பெண்ணுக்கு ஏற்படும் ஆபத்துகள் என்ன, கருத்தில் கொள்ள வேண்டிய வேறு ஏதேனும் காரணிகள் உள்ளனவா, வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய காரணிகள் உள்ளனவா என்பதைக் குறிப்பிட வேண்டும். 

கருவில் உள்ள அசாதாரணங்களைக் கண்டறியும் நவீனத் தொழில்நுட்பங்களின் தோற்றம், கருக்கலைப்பு மற்றும் கருக்கலைப்பைச் சுற்றியுள்ள சிக்கல்களை, மேலும் சிக்கலானதாக மாற்றுகிறது’’ என்று கூறி அப்பெண்ணின் கருக்கலைப்புக்கு அனுமதி அளித்துள்ளார்.

வாழ்க்கையே போராட்டங்கள் நிறைந்தது தானே.. அந்தப் பிஞ்சு குழந்தை பிறக்கும்போதே பாரங்களைச் சுமந்து போராட வேண்டுமா?