Published:Updated:

மகள்களை சீரழித்த தந்தைக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்!

விகடன் விமர்சனக்குழு
மகள்களை சீரழித்த தந்தைக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்!
மகள்களை சீரழித்த தந்தைக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்!
மகள்களை சீரழித்த தந்தைக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்!

புதுடெல்லி: பெற்ற மகள்களையே சீரழித்த தந்தைக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

டெல்லியை சேர்ந்த தொழிலாளி ராம்சிங்குக்கு 4 மகள்கள் உள்ளனர். 2 முறை திருமணம் செய்து கொண்டும் அவரைவிட்டு இரு மனைவிகளும் பிரிந்து சென்று விட்டனர். இதனால், தனது 4 மகள்களுடன் ராம்சிங் வசித்து வந்தார்.

ராம்சிங் மூத்த மகள் கடந்த 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். அதில், 15 வயது நிரம்பிய தன்னையும், 11 வயதாகும் தங்கையையும் தனது தந்தையே பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக கூறியிருந்தார்.

இதையடுத்து டெல்லி போலீசார் ராம்சிங் மீது வழக்குப்பதிவு செய்து அவரது மகள்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர். அதில், ராம்சிங் மகள்கள் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனே, ராம்சிங் மீது டெல்லி செசன்ஸ் நீதிமன்றத்தில் பாலியல் பலாத்கார வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அந்த தண்டனையை எதிர்த்து ராம்சிங் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தார். அந்த அப்பீல் மனுவை நீதிபதி பிரதீபா ராணி விசாரித்து, செசன்ஸ் நீதிமன்றம் விதித்த 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.

மேலும் நீதிபதி தனது தீர்ப்பில், ''பெற்ற மகள்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய தந்தையே இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டிருப்பது மன்னிக்க முடியாத குற்றம். அவருக்கு கருணையே காட்ட முடியாது. தன் மீது மகள்கள் வேண்டும் என்றே புகார் கூறியிருப்பதாக குறிப்பிட்டு இருப்பதை ஏற்க முடியாது.

புகாரில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது. தனது மகள்களுக்கு எதிராக தந்தையே குற்றச் செயல் புரிந்திருப்பது பேரழிவுக்கு சமமானது" என்று கூறியுள்ளார்.