Published:Updated:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: தனிநபர் ஆணையத்தின் 35-ம் கட்ட விசாரணை தொடங்கியது!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் 35-ம் கட்ட விசாரணை இன்று தொடங்கியுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: தனிநபர் ஆணையத்தின் 35-ம் கட்ட விசாரணை தொடங்கியது!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் 35-ம் கட்ட விசாரணை இன்று தொடங்கியுள்ளது.

Published:Updated:
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு, மே மாதம் 22-ம் தேதி நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இது தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபர் விசாரணை ஆணையம், விசாரணை நடத்திவருகிறது. இந்த ஆணையத்தின் 34-ம் கட்ட விசாரணை கடந்த ஆண்டு தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையிலுள்ள முகாம் அலுவலகத்தில் நடந்தது. இதில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது பணியிலிருந்த மாவட்ட ஆட்சியர், பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் ஒன்பது பேருக்குச் சம்மன் அனுப்பப்பட்டது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

இதுவரை 34 கட்டங்களாக நடந்த விசாரணையில் 1,417 பேருக்குச் சம்மன் அனுப்பப்பட்டு, 1,037 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. 1,483 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டிருக்கின்றன. விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்ட ஒன்பது உயரதிகாரிகளில் ஆறு பேர் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். இதில் ஒரு ஐ.ஏ.எஸ்., ஒரு காவல்துறை ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் அடங்குவர்‌. துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த என்.வெங்கடேஷ் நேரில் ஆஜராகி சாட்சி அளித்ததைத் தொடர்ந்து, 34-ம் கட்ட விசாரணையும் நிறைவடைந்தது.

இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் 35-ம் கட்ட விசாரணை இன்று தொடங்கியுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கலவரத்தின்போது நெல்லை சரக டி.ஜி.பி-யாக இருந்த கபில் குமார் நேரில் ஆஜராகி விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் எனக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism