Published:Updated:

பலாத்காரம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து: முலாயம் சிங்குக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பலாத்காரம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து: முலாயம் சிங்குக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

மஹோபா: பலாத்காரம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு, உத்தரப்பிரதேச நகர நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

பாலியல் பலாத்காரம் தொடர்பாக ஏற்கனவே பலமுறை சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், ஆண் பிள்ளைகள் சிறு சிறு தவறு தவறுகளை செய்வார்கள் எனக் கூறியிருந்தார்.

இதேபோல் சமீபத்தில் லக்னோவில் நடைபெற்ற விழா ஒன்றி முலாயம் சிங் யாதவ் பேசும்போது, ''ஒரு பெண்ணை 4 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்வது என்பது சாத்தியமில்லாதது. முன்விரோதம் காரணமாகவே இதுபோன்ற புகார்கள் அளிக்கப்படுகின்றன" என்று கூறி இருந்தார்.

முலாயமின் இந்த கருத்துக்கு பா.ஜ.க., காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், முலாயம் சிங் மீது உத்தரப்பிரதேசத்தில் உள்ள குல்பஹாத் நகர நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. பெண்களைத் தரக்குறைவாக சித்திரிப்பதற்கான தடைச் சட்டம் (3), (4) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக வருகின்ற செப்டம்பர் 16 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று முலாயம் சிங்குக்கு நோட்டீஸ் அனுப்புமாறு குல்பஹாத் நகர நீதிமன்ற நீதிபதி அங்கித் கோயல் நேற்று உத்தரவிட்டு உள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு