Published:Updated:

ஆண்மை நீக்கம்: காட்டுமிராண்டிகளுக்கு காட்டு மிராண்டித்தனமான சட்டங்கள்தான் தேவை என்கிறார் நீதிபதி

ஆண்மை நீக்கம்: காட்டுமிராண்டிகளுக்கு காட்டு மிராண்டித்தனமான சட்டங்கள்தான் தேவை என்கிறார் நீதிபதி
ஆண்மை நீக்கம்: காட்டுமிராண்டிகளுக்கு காட்டு மிராண்டித்தனமான சட்டங்கள்தான் தேவை என்கிறார் நீதிபதி

காட்டுமிராண்டித்தனமான செயல்களை காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள் மூலமே கட்டுப்படுத்த முடியும் என ஆண்மை நீக்கம் சட்டம் கொண்டு வருவது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார். .

ஆண்மை நீக்கம்: காட்டுமிராண்டிகளுக்கு காட்டு மிராண்டித்தனமான சட்டங்கள்தான் தேவை என்கிறார் நீதிபதி

கடந்த 2011-ம் ஆண்டு பிரிட்டனை சேர்ந்த ஒருவர், சிறார்களிடம் உறவு வைத்திருந்தாக புகார் எழுந்தது. சம்பந்தப்பட்ட சிறுவன்  அளித்த புகாரின் அடிப்படையில், பிரிட்டன் பிரஜை மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று முன்தினம் உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது நீதிபதி கிருபாகரன்,  '' குழந்தைகளிடமும் சிறார்களிடமும் பாலியல் உறவு கொள்வது காட்டுமிராண்டித்தனமானது. கற்கால மனிதர்கள் போல நடத்தைக் கொண்டது.

ஆனால் தற்போதுள்ள சட்டத்திட்டங்களால் இது போன்ற குற்றங்களை குறைத்து விட முடியாது. காட்டுமிராண்டித்தனமான குற்றச்செயல்களுக்கு காட்டுமிராண்டித்தனமான சட்டத்திட்டங்கள்தான் தேவை. அப்போதுதான் இது போன்ற குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது.

இதனால் சிறார்களை பாலியல் ரீதியில் துன்புறுத்துபவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்வது குறித்து சட்டம் இயற்றுவது பற்றி மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற காட்டுமிராண்டித்தனம்  குறைய வாய்ப்புண்டு .

தலைநகர் டெல்லியில் மட்டும் கடந்த 2012-ம் ஆண்டு 38 ஆயிரத்து 172 பாலியல் குற்றங்கள் சிறார்களுக்கு எதிராக நடந்துள்ளது. அதுவே 2014-ம் ஆண்டு அதுவே 89 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதே வேளையில் பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபடுபவர்களில் வெறும் 2.4 சதவீதம் பேரே தண்டனைக்குள்ளாகின்றனர்.

அமெரிக்கா, போலந்து, தென்கொரியா, ரஷ்யா போன்ற நாடுகளில் சிறார்களிடம் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டால், அவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய சட்டங்கள் உள்ளன.

இந்த பரிந்துரையை  'மனித உரிமை மீறல்' என்ற பெயரில்  எதிர்க்கப்போகும் சமூக ஆர்வலர்கள் முதலில், பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி  அன்பு பாராட்டுங்கள். ஆறுதல் அளியுங்கள். அதைவிடுத்து உங்கள் கருணையை குற்றவாளியிடம் காட்ட வேண்டாம்" என்று கருத்து தெரிவித்தார்.