Published:Updated:

ஸ்கைப் மூலம் விசாரணை நடத்தி விவாகரத்து வழங்கிய நீதிமன்றம்!

Vikatan Correspondent
ஸ்கைப் மூலம் விசாரணை நடத்தி விவாகரத்து வழங்கிய நீதிமன்றம்!
ஸ்கைப் மூலம் விசாரணை நடத்தி விவாகரத்து வழங்கிய நீதிமன்றம்!

ஹைதராபாத்: ஸ்கைப் மூலம் விசாரணை நடத்தி தம்பதிகளுக்கு விவாகரத்து வழங்கி உள்ளது தெலங்கானா நீதிமன்றம்.

ஸ்கைப் மூலம் விசாரணை நடத்தி விவாகரத்து வழங்கிய நீதிமன்றம்!

தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த தம்பதிகளுக்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் அவர்களுக்குள் மனகசப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் அந்த பெண், தன்னுடைய கணவனுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்தார். இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் கிரண்குமாரும் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு தெலங்கானா மாநில கீழ்மை நீதிமன்றம் ஒன்றில், மூத்த நீதிபதி கம்மம் வெங்கட ரமணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் அமெரிக்காவில் உள்ளதை அடுத்து ஸ்கைப் மூலம் விசாரணை நடத்த நீதிபதி ஒப்புக் கொண்டார். ஹைதராபாத் உயர் நீதிமன்ற வழக்கு ஒன்றின் தீர்ப்பை அடிப்படையாக கொண்டு இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. மூவரையும் விசாரணை நடத்திய பிறகு விவாகரத்து வழங்கி, நீதிபதி உத்தரவிட்டார்.

இது குறித்து விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்த பெண்ணின் தரப்பு ஆலோசகர் கூறும்போது, ''என்னுடைய கட்சிக்கார பெண்மணி அவளது கணவர் கிரண் குமார் என்பவரிடம் இருந்து விவகாரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். அந்த பெண்மணி கடந்த இரண்டு வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வருவதால், விசாரணைக்கு நேரில் ஆஜராக முடியவில்லை.

இதனையடுத்து, விவகாரத்து கோரிய அந்த பெண்ணின் தந்தை மற்றும் கணவரிடம் ஸ்கைப் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அந்த பெண்ணிடமும் ஸ்கைப் மூலம் நீதிபதி விசாரணை செய்து இறுதி கருத்தினை கோரினார். அவரும் விவாகரத்து வேண்டும் என்று உறுதியாக கூறினார். அதன் அடிப்படையில் நீதிபதி விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளார்" என்றார்.