Published:Updated:

சாத்தான்குளம்: `தமிழகம் வரும் 7 சி.பி.ஐ அதிகாரிகள் கொண்ட குழு’ - நாளை முதல் விசாரணை

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

தமிழக அரசு சார்பில், "சி.பி.சி.ஐ.டி விசாரணையில் 10 பேரைக் கைது செய்துள்ளோம். மேலும், சாட்சியங்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. ஆவணங்கள் அனைத்தும் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது’’ என வாதிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், மொபைல் கடை வைத்து நடத்திவந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டு பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தினை தாமாக முன்வந்து உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரித்து வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கு விசாரணை இன்று நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

பென்னிக்ஸ், ஜெயராஜ்
பென்னிக்ஸ், ஜெயராஜ்
`12 மணி நேரமாகக் கிழிந்த நிலையில் பறந்த தேசியக் கொடி!’ - மதுரை ரயில் நிலைய சர்ச்சை

தமிழக அரசு சார்பில், "சி.பி.சி.ஐ.டி விசாரணையில் 10 பேரைக் கைது செய்துள்ளோம். மேலும், சாட்சியங்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. ஆவணங்கள் அனைத்தும் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது. சாட்சியம் அளித்த தலைமைக் காவலர் ரேவதிக்கு காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராகி, “சி.பி.ஐ அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழு, நாளை தமிழகம் வருகிறது. நாளை முதல் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை செய்ய உள்ளனர். தற்போது வரை சி.பி.ஐ தரப்பில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

இதைக் கேட்ட நீதிபதிகள், ``சி.பி.சி.ஐ.டி, தற்போதைய நிலையை அறிக்கையாகத் தயார் செய்து சீலிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்ய வேண்டும். அறிக்கையில், சாத்தான்குளம் காவல்நிலையம், மருத்துவமனை மற்றும் கோவில்பட்டி கிளைச் சிறையில் என்ன நடந்தது என்பதன் முழு விவரங்கள் இருக்க வேண்டும்.

சி.பி.சி.ஐ.டி’யோ, சி.பி.ஐ’யோ கைது செய்யப்பட்டவர்களை கைது செய்யப்பட்ட முதல் 15 நாள்கள் முடிவடைவதற்குள்ளாக காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Sathankulam... ஜெயராஜ் குடும்பத்தினர்... சிபிசிஐடி அதிரடி!
அடுத்த கட்டுரைக்கு