Published:Updated:

உசிலம்பட்டி கல்லூரியில் முறைகேடாக பணி நியமனம்?

Vikatan Correspondent
உசிலம்பட்டி கல்லூரியில் முறைகேடாக பணி நியமனம்?
உசிலம்பட்டி கல்லூரியில் முறைகேடாக பணி நியமனம்?
உசிலம்பட்டி கல்லூரியில் முறைகேடாக பணி நியமனம்?

உசிலம்பட்டியில் இயங்கி வரும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கலைக் கல்லூரியில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் சுமார் 250 பேர் வேலை செய்து வருகிறார்கள். 3000 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரி கள்ளர் கல்விக்கழகம் அறக்கட்டளையின் கீழ் இயங்கி வருகிறது.

இந்நிலையில், 'இந்தக் கல்லூரியில் புதியதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தகுதி இல்லாதவர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். கள்ளர் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் முதல்வர், முன்னாள் முதல்வர், கள்ளர் கழக செயலாளர் ஆகியோர் முறைகேடாக பணி இடங்களை  நிரப்பி  இருக்கிறார்கள்.' என குற்றஞ்சாட்டி லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அனுப்பியுள்ளார்  உசிலம்பட்டியைச்  சேர்ந்த வனராஜ். அவரது புகாருக்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால் உயர்நீதிமன்ற தமிழ்நாடு  மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார் வனராஜ். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகள் செல்வம் மற்றும் கலையரசன் அடங்கிய பெஞ்ச், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி டி.எஸ்.பி தலைமையில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

-சண்.சரவணக்குமார்