Published:Updated:

பத்திரப் பதிவு செய்யத் தடையில்லை; ஆனால்... உயர்நீதிமன்றம் கிடுக்கிப்பிடி

பத்திரப் பதிவு செய்யத் தடையில்லை; ஆனால்... உயர்நீதிமன்றம் கிடுக்கிப்பிடி
பத்திரப் பதிவு செய்யத் தடையில்லை; ஆனால்... உயர்நீதிமன்றம் கிடுக்கிப்பிடி

அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகளைப் பத்திரப் பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையைத் தளர்த்தியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், 2016 அக்டோபர்  23-ம் தேதிக்கு முன்பு பத்திரப் பதிவு செய்த வீட்டுமனையை மறு பதிவு செய்யலாம் என, முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

பத்திரப் பதிவு செய்யத் தடையில்லை; ஆனால்... உயர்நீதிமன்றம் கிடுக்கிப்பிடி


 

விவசாய நிலங்களை  வீட்டுமனைகளாக மாற்றத் தடை விதிக்கக் கோரி, ஜனவரி மாதம் வழக்கறிஞர்  யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை பத்திரப் பதிவு செய்யத்  தடை விதித்தது. இந்த வழக்கில், பதில் மனுத் தாக்கல்செய்த தமிழக அரசு, அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை வரைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாகக் குறிப்பிட்டிருந்தது.

இதற்குப் பதிலளித்து, உயர்நீதிமன்றத்தில் புதிய மனுவை யானை ராஜேந்திரன் தாக்கல்செய்தார். அதில், கடந்த 14 ஆண்டுகளில் 26.42 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள், வீட்டுமனைகளாக மாற்றப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அங்கீகாரம் பெற்ற, அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகளைப் பத்திரப் பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கிய உயர்நீதிமன்றம், 2016 அக்டோபர் 23-ம் தேதிக்கு முன்பு பத்திரப் பதிவு செய்த வீட்டுமனையை மறு பதிவு செய்யலாம் என்று கூறியது.

மேலும், சாலை, கழிவுநீர்க் குழாய் வசதிக்கு இடம் தராத மனைகளை முறைபடுத்த அவகாசம் அளித்த உயர்நீதிமன்றம், வீட்டுமனைகள் சாலைக்கு 22 அடி இடம் விட வேண்டும் என்ற விதியை மீறக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.