Published:Updated:

அமைச்சர் என்றால் சட்டவிதிகளுக்கு மேலானவரா? அமைச்சர் காமராஜுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் சாட்டையடி

'நீதிமன்றம் உத்தரவிட்டும் அமைச்சர் காமராஜ் மீது ஏன் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை' என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், 'அமைச்சர் என்றால் சட்டவிதிகளுக்கு மேலானவரா' என்று கண்டனம் தெரிவித்தது.

எஸ்.வி.எஸ்.குமார் என்ற ஒப்பந்ததாரரிடம் 30 லட்சம் ரூபாய் மோசடிசெய்ததாக அமைச்சர் காமராஜ் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைச்சர் காமராஜ் மீது மோசடி வழக்குப்பதிவுசெய்யுமாறு உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை மே 3ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தது.

அதன்படி, வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அமைச்சர் காமராஜ் மீது ஏன் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை' என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும், புகார் தெரிவித்த பின்னர் அமைச்சர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என வினா எழுப்பிய உச்சநீதிமன்றம், 'அமைச்சர் என்றால் சட்டவிதிகளுக்கு மேலானவரா' என்று கண்டனம் தெரிவித்தது.

அப்போது, தமிழக அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், புகார் தெரிவித்துள்ள எஸ்.வி.எஸ்.குமார், மோசடியில் ஈடுபட்டவர் என்று தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக, வரும் 8ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல்செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.