Published:Updated:

விவசாயிகள் பிரச்னை: தமிழக அரசு அறிக்கை தாக்கல்செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

சண்முகபாண்டியன்.தே
விவசாயிகள் பிரச்னை: தமிழக அரசு அறிக்கை தாக்கல்செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!
விவசாயிகள் பிரச்னை: தமிழக அரசு அறிக்கை தாக்கல்செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

'விவசாயிகளின் நலன் காக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?' என்று மூன்று நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விவசாயிகள் பிரச்னை: தமிழக அரசு அறிக்கை தாக்கல்செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

தமிழக விவசாயிகள் தொடர்பான வழக்கு, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'விவசாயிகளின் நலனுக்காக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?' என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பொருள்களுக்கு குறைந்த ஆதார விலை வழங்குவதாகவும், உழவர் சந்தை மற்றும் தகவல் மையங்கள் சிறப்பாகச் செயல்படுவதாகவும் தமிழக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழக அரசின் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அரசின் நடவடிக்கைகளைப் பாராட்டுவதாகக் கூறினர். இதனிடையே, 'தமிழக அரசின் நடவடிக்கைகள்குறித்து விரிவான அறிக்கை தயார்செய்து, மூன்று நாள்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்' என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் 8-ம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.