Published:Updated:

மருத்துவ இடஒதுக்கீடு விவகாரம்: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

மருத்துவ இடஒதுக்கீடு விவகாரம்: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!
மருத்துவ இடஒதுக்கீடு விவகாரம்: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

முதுநிலை மருத்துவ இடஒதுக்கீட்டு விவகாரத்தில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், மூன்று பேர் கொண்ட அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மருத்துவ இடஒதுக்கீடு விவகாரம்: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

மருத்துவ முதுநிலைப் படிப்புக்கான 50 சதவிகித, இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்துசெய்தது. இதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இடஒதுக்கீட்டு விவகாரத்தில், அவசர சட்டம் இயற்ற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்திவருகின்றனர். தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும், மருத்துவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை முன்வைத்துள்ளன.

இதனிடையே, 50 சதவிகித இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்தக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், சுப்ரமணியன் ஆகியோர் மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளனர்.

நீதிபதி சசிதரன் அளித்த தீர்ப்பில், '50 சதவிகித  இடஒதுக்கீட்டை ரத்துசெய்யும் உத்தரவுக்குத் தடை விதிப்பதாக அறிவித்தார்'. நீதிபதி சுப்ரமணியன் அளித்த தீர்ப்பில்,'மருத்துவ கவுன்சிலின் விதிகளின்படி புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும்' எனக் கூறினார். இதையடுத்து, மூன்று பேர் கொண்ட அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து உயர்நீதிமன்றப் பதிவாளர் கூறுகையில்,' மருத்துவ இடஒதுக்கீட்டு வழக்கு, தலைமை நீதிபதியின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்படும்' எனக் கூறியுள்ளார்.