Election bannerElection banner
Published:Updated:

அந்நிய செலாவணி மோசடி வழக்கு - பாஸ்கரனிடம் மே 10-ம் தேதி குறுக்கு விசாரணை

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா உறவினர் பாஸ்கரன் இன்று எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அந்த வழக்கு மே 10-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

1997-98-ம் ஆண்டுகளில் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக டி.டி.வி.தினகரன், சசிகலா உள்ளிட்டவர்கள் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் சசிகலா அக்காள் மகன் பாஸ்கரன் நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, 'இந்தக் குற்றத்தில் நீங்கள் ஈடுபட்டீர்களா? என்று பாஸ்கரனிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பாஸ்கரன், 'குற்றத்தில் ஈடுபடவில்லை' என்று பதில் அளித்தார். அதனைக்கேட்ட நீதிபதி, 'மே 10-ம் தேதி குறுக்கு விசாரணை நடைபெறும்' என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு