Published:Updated:

பணி ஓய்வு பெற்றார் நீதிபதி கர்ணன்: தீவிரப்படுத்தப்படுகிறதா தேடுதல் வேட்டை?

பணி ஓய்வு பெற்றார் நீதிபதி கர்ணன்: தீவிரப்படுத்தப்படுகிறதா தேடுதல் வேட்டை?
பணி ஓய்வு பெற்றார் நீதிபதி கர்ணன்: தீவிரப்படுத்தப்படுகிறதா தேடுதல் வேட்டை?

உச்சநீதிமன்றத்தால் தண்டனை அறிவிக்கப்பட்டு தலைமறைவாக இருந்துவரும் நீதிபதி கர்ணனின் பதவிக்காலம் இன்றோடு நிறைவு பெறுகிறது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளால், ‘நீதிமன்ற அவமதிப்பு’ வழக்கில் தண்டனைபெற்று தலைமறைவாக உள்ளவர் நீதிபதி கர்ணன். தமிழகத்தைச் சேர்ந்த இவர், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்துவந்தார். சில மாதங்களுக்கு முன்னர், தன் சக் நீதிபதிகள் மீது ஊழல் புகார் தெரிவித்திருந்தார். இதையொட்டி, உச்சநீதிமன்றத்தின் தன்னார்வ விசாரணையில் இறுதியாக நீதிபதி கர்ணன் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

உச்சநீதிமன்ற  நீதிபதிகளுக்கே தண்டனை விதித்த நீதிபதி கர்ணன் மீது அடுக்கடுக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையொட்டி, உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், தன் பதவிக்காலத்திலேயே தலைமறைவானார். சுமார் ஒரு மாத காலம்  தலைமறைவாக வாழ்ந்துவரும் நீதிபதி கர்ணனின் பதவிக்காலம் இன்றோடு நிறைவுறுகிறது.

இதையடுத்து, முடங்கிக்கிடந்த நீதிபதி கர்ணனைத் தேடும் பணி, மீண்டும் முடுக்கிவிடப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. உச்சநீதிமன்ற நீதிபதிகளால் சிறைத்தண்டனை பெற்ற முதல் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமறைவாக இருக்கும்போது, பணி ஓய்வு பெற்ற நீதிபதி எனப் பல பெயர்கள் நீதிபதி கர்ணனுக்கு கிடைத்துள்ளது.