Published:Updated:

பால் கலப்படம்: 13 தனியார் பால் நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

பால் கலப்படம்: 13 தனியார் பால் நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
பால் கலப்படம்: 13 தனியார் பால் நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாகக் கூறி அதிரடியைக் கிளப்பினார் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இந்தக் குற்றச்சாட்டைத் தனியார் பால் நிறுவனங்கள் மறுத்தன. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. குறிப்பாக, இதற்கு பின் பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை என்று அடுத்தடுத்த அதிர்ச்சி கிளம்பியது. 

பால் கலப்படம்: 13 தனியார் பால் நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!


இந்நிலையில், பால் கலப்பட விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்டு கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கலப்படம் செய்த தனியார் பால் நிறுவனங்கள்மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக் குறித்து விளக்கமளிக்க, அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதன்படி, தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து நான்கு வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பால் கலப்படம் தொடர்பாக பதிலளிக்கக் கூறி 13 தனியார் பால் நிறுவனங்களுக்கும், உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதையடுத்து, வழக்கு விசாரணை ஜூலை 24 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.