Published:Updated:

கர்ணனை விடுவிக்க முடியாது! முறையீட்டை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

கர்ணனை விடுவிக்க முடியாது! முறையீட்டை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்
கர்ணனை விடுவிக்க முடியாது! முறையீட்டை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனை விடுவிக்கக்கோரி அவரது வழக்கறிஞர் வைத்த முறையீட்டை, உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணனுக்கு, அவதூறு வழக்கில் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்தது உச்ச நீதிமன்றம். இதையடுத்து, அவரைக் கைதுசெய்ய மேற்குவங்க காவல்துறையினர் சென்னை வந்தனர். தலைமறைவாக இருந்தபோது, நீதிபதி கர்ணன் ஓய்வுபெற்றார். அவரைத் தீவிரமாக காவல்துறையினர் தேடிவந்த நிலையில், கோவையில் நேற்றிரவு கர்ணனைக் கைதுசெய்தனர். இன்று காலை விமானம்மூலம் அவர் கொல்கத்தா அழைத்துச்செல்லப்பட்டார்.

இந்த நிலையில், கர்ணனின் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் இன்று முறையிட்டார். அப்போது, ஜனாதிபதி ஒப்புதல் இல்லாமல் நீதிபதியைக் கைதுசெய்ய முடியாது என்றும், அவரை விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். அப்போது, ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பில் தலையிட முடியாது என்று கூறி, கர்ணனின் வழக்கறிஞர் கோரிக்கையை நிராகரித்தது.