Published:Updated:

ரூ.600 கோடி முட்டை டெண்டர் ரத்தாகுமா? சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ரூ.600 கோடி முட்டை டெண்டர் ரத்தாகுமா? சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை 
ரூ.600 கோடி முட்டை டெண்டர் ரத்தாகுமா? சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை 

ரூ.600 கோடி முட்டை டெண்டர் ரத்தாகுமா? சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழக சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களுக்கு முட்டை விநியோகம் செய்ய ரூ.600 கோடி மதிப்பிலான டெண்டர்  திறப்புக்கு 14.7.2017 அன்று இறுதிநாள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நாமக்கல் இளையராஜா மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, நீதிபதி துரைசாமி முன்பு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இளையராஜா அந்த மனுவில், ''ரூ.600 கோடிக்கான முட்டை டெண்டரை 25,000 ரூபாய் செலுத்திதான் வாங்க வழிவகை செய்யப்பட்டு இருந்தது. டெண்டருக்குக் காப்புத் தொகை ரூ.4.75 கோடி என்று நிர்ணயித்து இருந்தார்கள். டெண்டர் இறுதி நாளான 14.7.17 அன்று காலை
11 மணிக்குள் காப்புத் தொகைக்கு டி.டி கொடுக்க வேண்டும் என்று நிபந்தனையும் விதிக்கப்பட்டு இருந்தது. மேலும், இந்த டெண்டரில் பல நிபந்தனைகள் இணைக்கப்பட்டு இருந்தன. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே டெண்டர் கொடுக்கும் வகையில் அந்த விதிகள் உள்ளன. எனவே, இந்த டெண்டர் அறிவிப்பை ரத்து செய்துவிட்டு, புதிய டெண்டர் வெளியிட வேண்டும்'' என்று கூறியிருக்கிறார்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு