Published:Updated:

நீதிபதிகளைக் கொல்ல முயற்சிசெய்தவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

    நீதிபதிகள் சென்ற காரை தாக்கி, அவர்களை கொல்ல முயற்சி செய்த மூவருக்கு டெல்லி நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு பரிதாபாத்தில் நீதிபதிகளாக பணியாற்றி வந்த மூன்று நீதிபதிகள் பணி முடிந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள், கார்களில் கற்களை வீசி நீதிபதிகளை கொல்ல முயற்சி செய்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் பொதுச் சொத்துக்கு பங்கம் விளைவித்தல் மற்றும் நீதிபதிகளைக் கொலை முயற்சி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை, டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் குற்றவாளிகள் அணில்ராஜ், ரோகித் மற்றும் பிரசாந்த் ஆகிய மூவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

அடுத்த கட்டுரைக்கு