Published:Updated:

ஓட்டல் தகராறுக்காக தேங்கிய நீதிமன்றப் பணி! - தொடர் போராட்டத்தில் தேனி வக்கீல்கள்

எம்.கணேஷ்
ஓட்டல் தகராறுக்காக தேங்கிய நீதிமன்றப் பணி! - தொடர் போராட்டத்தில் தேனி வக்கீல்கள்
ஓட்டல் தகராறுக்காக தேங்கிய நீதிமன்றப் பணி! - தொடர் போராட்டத்தில் தேனி வக்கீல்கள்

தேனி மாவட்டத்தில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பை மேற்கொள்வார்கள் எனத் தேனி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் நாளான இன்று வழக்கறிஞர்கள் அனைவரும் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பெரியகுளத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன். இவர் கடந்த வாரம் ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அங்கே சத்தம் போட்டுக்கொண்டிருந்த இளைஞர்கள் சிலரைக் கண்டித்து அமைதியாகச் சாப்பிடுமாறு மகாராஜன் கூறியுள்ளார்.

அதனால் ஆத்திரமடைந்த அவர்கள், மகாராஜனைக் கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர். இந்நிலையில் மகாராஜனை தாக்கியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து ஒருவரைக் கைது செய்தனர். தப்பி ஓடிய அனைவரையும் கைது செய்யாமல் காவல்துறை காலம் தாழ்த்துவதாகக் கடந்த சில நாள்களாகவே பெரியகுளம் பகுதியில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு ஆதரவாக இன்று தேனி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளது. இதனால், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் வெறிச்சோடிக் காணப்பட்டது. 'குற்றவாளிகளை விரைந்து கைது செய்யும் வரை மாவட்டம் முழுவதும் பலகட்டப் போராட்டங்களை நடத்துவோம்' என வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.