Published:Updated:

இந்து முன்னணி சசிக்குமார் கொலை வழக்கு குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்!

எம்.புண்ணியமூர்த்தி
இந்து முன்னணி சசிக்குமார் கொலை வழக்கு குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்!
இந்து முன்னணி சசிக்குமார் கொலை வழக்கு குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்!
இந்து முன்னணி சசிக்குமார் கொலை வழக்கு குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்!

இந்து முன்னணியைச் சேர்ந்த சசிக்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சதாம் சி.பி.சி.ஐ.டி  போலீஸாரால் நேற்று கோவையில் கைது செய்யப்பட்டார். சதாமை சி.பி.சி.ஐ.டி போலீஸார் இன்று கோவை தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி மதுரசேகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இந்து முன்னணியின் கோவை மாநகர மாவட்ட மக்கள் செய்தித் தொடர்பாளர் சசிக்குமார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் 4 பேர் கொண்ட மர்மக் கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கோவையில் பெரும் பதற்றத்தை  ஏற்படுத்திய இந்த வழக்கை முதலில்  துடியலூர் போலீஸார் விசாரித்து வந்தனர். அதில், முன்னேற்றம் இல்லாததால் அந்த வழக்கு சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றப்பட்டது.  பலகட்ட விசாரணைக்குப் பிறகு கோவை கே.கே.நகரைச் சேர்ந்த ஜாபர் அலியின் மகன் சையது அபுதாஹிர்  என்பவரைக் கைது செய்தனர். 

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் தீவிரமாக தேடப்பட்டுவந்தனர். அதில் முபாரக் மற்றும் சதாம் ஆகிய இருவர் முக்கிய குற்றவாளிகள் எனவும், அவர்களைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு தலா இரண்டு லட்சம் பரிசு  எனவும் அறிவித்திருந்தது போலீஸ்.

இந்நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் கோவை கரும்பத்தம்பட்டி அருகே வைத்து சதாம் என்பவரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்தனர். சசிக்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சதாமை இன்று மதியம் கோவை தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இன்றிலிருந்து 15 நாள்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்குமாறு நீதிபதி மதுரசேகரன் உத்தரவிட்டுள்ளார்.