Published:Updated:

தமிழகத்தில் எய்ம்ஸ் : மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

அருண் சின்னதுரை
தமிழகத்தில் எய்ம்ஸ் : மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் எய்ம்ஸ் : மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மையம் அமையும் இடத்தை இந்தாண்டு இறுதிக்குள் மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் : மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!


தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைய உள்ளது எனக் கேட்டு, ரமேஷ், பாஸ்கரன் ஆகியோர் தரப்பில் உயர்நீ திமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் பெருந்துறை, செங்கல்பட்டு, தோப்பூர், செங்கிப்பட்டி, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்களைத் தேர்வு செய்து மத்திய அரசுக்கு பட்டியல் அனுப்பியதாகவும் பின்னர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தமிழகத்தில் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்பது தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மத்திய அரசுதான் இது குறித்து முடிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வரும்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜூலை 12-ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பரிந்துரை செய்யப்பட்டுள்ள இடங்களை ஆய்வு செய்ய துணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள் எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தைத் தேர்வு செய்து அறிவிக்க எவ்வளவு காலம் ஆகும் எனக் கேள்வி எழுப்பினர். அதற்குக் கூடிய விரைவில் அறிக்கப்படும் என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் பதில் அளித்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தைத் தேர்வு செய்து அறிவிக்க சரியாக எவ்வளவு காலம் ஆகும் என்பதைக் குறித்து மத்திய அரசிடன் தகவல் பெற்று பிற்பகல் 2:15-க்குத் தெரிவிக்க உத்தரவிட்டனர்.

பின்னர், மீண்டும் விசாரணைக்கு வரும்போது மத்திய அரசிடமிருந்து தகவலைப் பெற்று மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். அதில்,  "எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை 2 மாதத்தில் அறிவிப்பதாகத் தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து நீதிபதிகள் இந்தாண்டு இறுதிக்குள் (டிசம்பர் 31) எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்க வேண்டும் எனவும், 2018 ஜனவரி
1-ம் நாள் அது தமிழக மக்களுக்கு நல்ல செய்தியாக இருக்க வேண்டும் என நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அடங்கிய அமர்வு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.